Wednesday, February 27, 2008

27.02.2008 இன்றைய பங்குத் தகவல்

நேத்து ரயில்வே பட்ஜெட்னால சென்சென்க்ஸ் அதிகமாச்சாம். ஆனால்,வெள்ளிக்கிழமை தாக்கலாகபோற பட்ஜெட்னால, கம்பெனிகள் மகிழ்ச்சியடையும்படி ஒண்ணும் இருக்காதாம். இந்த பட்ஜெட் வரப்போர நாடாளுமன்ற தேர்தல மனசுல வச்சு தயாரிக்கப்படுமாம். அதனால், பங்குச்சந்தைக்கு வெளிநாட்டு முதலீடு அதிக அளவில் வராதாம். அதனால, பங்குச் சந்தை இப்போதைக்கு உயர்ரதுக்கு வாய்ப்புள்ளயாம்.
ஜனவரில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.17000 கோடிக்கு பங்கை வித்தாங்களாம். பிப்ரவரில ரூ.5000 கோடிக்கு வாங்கி "சராசரி" செய்தாங்களாம்.

இந்த வருடம் 2008ல "தனியார் ஈக்விடி"(Private Equity) செஞ்ச முதலீட்ல 30 சதவீதத்துக்குமேல நஷ்டம் ஆயிடுச்சாம்.

எந்தப்பத்திரிக்கைய எடுத்தாலும் சென்செக்ஸ் 16000க்கு பக்கத்துல வரும்னு சொல்ராங்க. அது அப்படி வருமோ வராதோ, இந்த மாதிரி செய்திகளப் படிச்சுட்டு சில்லறை முதலீட்டாளர்கள் எல்லாரும் விக்க ஆரம்பிப்பாங்க. அப்ப சென்செக்ஸ் 16,000க்கு வந்துடும் ==)))

Thursday, February 21, 2008

21.02.2008 இன்றைய பங்குத் தகவல்

இன்னும் ரெண்டு,மூணு நாளைக்கு நிஃப்டி 4950/5000(சப்போர்ட் லெவெல்) போகும்வரைக்கும் பங்குச்சந்தை இப்படியேத்தான் போகுமாம். அடுத்த வியாழனுக்கு முன்பு, F&Oக்கு இந்த மாத முடிவு தேதிக்கு முன்பு, ஷார்ட் கவரிங் இருக்குமாம்.

ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் தின வர்த்தகம், ஸ்விங் ட்ரேட் செய்து பார்க்கலாம்.

உங்களுக்குத்தெரிந்த பங்கு, நீங்கள் எதிர்பார்த்த, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்போது, வாங்கி 3,5 நாட்கள் பொறுத்திருந்து சுமார் 5%,10% லாபம் என்று கிடைக்கும்போது விற்று விட்டு வெளியேறி விடலாம்.

Monday, February 18, 2008

18.02.2008 இன்றைய பங்குத் தகவல்

சென்செக்ஸ் 19000க்கு மேல போனாதான் "புல் ரன்"ன்னு சொல்ராங்க. கடந்த 12ம் தேதி சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் விழுந்ததுக்கு யாரோ வேண்மின்னே செய்த காரியம்னு தெரியுது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் பட்டியல் செய்றப்போ, வேணுமின்னே அவரோட குழு கம்பெனிகளின் பங்கு விலையை வேணுமின்னே குறைச்சிருக்காங்கண்ணும் அத விசாரிக்கணுமின்னும் அனில் "செபி(SEBI)"க்கு ஓலை கொடுத்திருக்கார்.

ரிலையன்ஸ் பவர் பங்கு பட்டியலிடப்பட்டபின் முதலீட்டாளர் அடைந்த நட்டத்த ஈடு கட்ட போனஸ் பங்கு கொடுக்கப் போராங்களாம். ரிலையன்ஸோட பவரோட விலை அதிகம்னு இப்ப சொல்ராங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அதனோட விலை ரூ.250 - 300 என்று வருமாம்.

2007 டிசம்பர் மாதத்துடன் முடிந்த 1 வருட வளர்ச்சி, கம்பெனிகளின் வளர்ச்சி, 2006வுடன் ஓப்பிடுபோது அவ்ளோ சிறப்பா இல்லையாம். இருந்தாலும் மத்த நாடுகளோட ஓப்பிடும்போது வளர்ச்சி நல்லாத்தான் இருக்குமாம்.

சிமெண்ட் துறை : சிமெண்ட் துறை 2006ல் சுமார் 200 சதவீதத்துக்கும்மேல் வளர்ச்சியடந்தது. ஆனால், அது 2007 வெறும் 6.12 சதவீதம்தான் வளர்ச்சியடைந்துள்ளது.

ஸ்டீல் துறை: ஸ்டீல் துறை நல்ல வளர்ச்சியைக் காணுமாம்.

ஜிண்டால் ஸ்டீல் & பவர் : 13ஆம் தேதி ரூ.2134க்கு வாங்கினேன். கிட்டதட்ட 11 சதவீதம் லாபம். 5:1 என்று பங்கு பிரிப்புக்கு முன் அது 15500 என்று போனதாக ஞாபகம். அது ரூ.2700 வரை வந்தா வித்துரலாம்னு இருக்கேன்.

Wednesday, February 13, 2008

13.02.2008 இன்றைய பங்குத் தகவல்

பங்குச் சந்தை கரடியின் ஆதிக்கத்தில் போய்ட்டிருக்கிறதா கிட்டத்தட்ட எல்லா பங்கு நிபுணர்களூம் அபிப்ராயப்படுராங்க. பங்குச் சம்பந்தமான வலைத்தளங்கள், வணிக டிவி சேனல்ல வர்ரவங்க எல்லாரும் இப்படித்தான் அபிப்ராயப்படுராங்க.

நிஃப்டி குறீயிடு 200 நாட்கள் நகரும் சராசரி(Moving Average)யை விட குறைந்துபோய்ட்டதாம். அதாவது, நிஃப்டி குறியீடு 5000 தாண்டினால் பங்குச் சந்தை மேலேறுமாம். அது 5000 க்கு கீழே தொடர்ந்து 1 மாதத்துக்கு இருந்தால் அது கட்டாயமா கரடிச் சந்தைதானாம்.

சந்தையில் இப்போ குறியீட்டுப் புள்ளிகள் 200,400னு அதிகரித்தால்கூட பங்கு வணிகத்தின் மதிப்பு(volume) மிகக் குறைவுதானாம். அதுனால, புள்ளிகள் அதிகரிப்பு ஒரு செயற்கையான் அதிகரிப்புதானாம். அதாவது, சந்தை மேலேறுவதற்க்கு இன்னும் கொஞ்ச காலமாகுமாம்.
அலுவலகத்தில் என் பக்கத்து இருக்கையிலிருப்பவர் நாள் முழுவதும் சந்தை/பங்குகளின் போக்கை அவதானிப்பதோடு, மற்ற பங்குச் சந்தை நண்பர்களோடு சாட்(chat), மின்னஞ்சல் மூலமா தொடர்பு கொண்டபடி இருப்பார்.

அவருடைய நணபர், ஏதோ பங்கு வணிகரோட அலுவலகத்தில் இருக்காராம். அவர் உறுதியா சொல்ராராம், சென்செக்ஸ் 12000க்கு கட்டாயமா போகுமாம்.

மேற்கூறிய எல்லா விவரங்களையும் சீர்தூக்கிப் பார்த்தா, நட்டம் வந்தாலும் பரவாயில்ல, இப்போ பங்குச் சந்தையை விட்டு வெளியேறிவிடுவதுதான் உத்தமம் என்று எண்ணி ஒரு பங்கைத்தவிர, எல்லா பங்குகளையும் நேற்றே விற்று விட்டேன். ஒரு பங்கை நேற்று விற்க்க முடியவில்லை. ஏனெனில், அது Lower Circitல் இருந்தது. நல்ல வேளையாக இன்னைக்கு விற்றுவிட்டேன். அதன் பின்தான் மனசுக்கும் நிம்மதியாச்சு.

நாம வித்தாதான் நம்ம வித்த பங்குகள் எல்லாம் உடனே மேலேறிடுமே =)). இன்று காலையில் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்குமேல் உயர்ந்தது. பின் 200 புள்ளி அளவில் குறைந்து, சுமார் 400 புள்ளி அளவில் உயர்ந்து முடிவடைந்தது.

Tuesday, February 12, 2008

12.02.2008 இன்றைய பங்குத் தகவல்

பங்குச் சந்தையில் சுனாமி
சுனாமி அடிச்சப்ப எப்படி இருந்திருக்கும்னு இப்போ நல்லா புரியுது. அந்த சமயத்தில் அப்படி தப்பிப் பிழைச்சவன்கிட்ட எப்டி இருக்கன்னு கேட்டா எப்படி இருக்கும்? அது மாதிரி இருக்கு நம்ம நிலைமை. சாதாரணமா ஒரு 2,3 நாள் பங்குச் சந்தைல புள்ளிகள் குறையும், பின் மேலேறும்.
ஆனா, இப்ப இறங்கற சென்செக்ஸ் புள்ளிகள், நிக்காம பாதாளத்துக்குப் போய்ட்டு இருக்கற மாதிரி தெரியுது.
ஒரு மாசத்துக்குமுன் சென்செக்ஸ் மேலே போனப்ப, அது 25000 போகும்னு சொன்ன அதே பங்குச்சந்தை வல்லுனர்கள் இப்பொ அது 15000 இல்ல 12500 போகும்னு சொல்ல ஆரம்பிசுட்டாங்க.
அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பணத்தை வேக வேகமா பங்குச் சந்தையிலிருந்து எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க திரும்ப வந்து பணத்தைப் போடறவரைக்கும் சந்தை இப்படித்தன் போகும்போல. மத்திய அரசு பட்ஜெட்ட தாக்கல் செஞ்சப்புரம், சந்தை நல்லா இருக்கும்னு சொல்ராங்க.
கடந்த 2,3 மாசமா வாங்கிய பங்குகள் எல்லாம் 30,40,50 சதவீதம்னு மதிப்பு குறைஞ்சிருக்கு. இதே வேகத்தில போனா அப்புரம் பங்கு அதனோட முகமதிப்பு(சாதாரணமா ரூ.10)க்கு வந்திரும்போல. அப்படி வாங்கின பங்குகளை அப்படியே விட்டுவச்சுட்டு, அது இன்னும் 2,3,6 மாதம் கழித்து பழைய விலைக்கு வரும்னு இருந்துரலாம். இல்ல, இந்த நஷ்டம் போதும்னு நஷ்டத்துக்கே வித்துட்டு, இன்னும் நல்ல விலை வரும்வரை காத்திருக்கலாம்.
இந்த மாதிரி நிச்சயமில்லாத சந்தையில டிரேட் செய்யாம இருக்கரதே ஒரு டிரேட்னு ஒருத்தர் வணிக டிவி சேனலில் சொன்ன மாதிரி, ஒண்ணும் வாங்காம/விக்காம இருந்திரலாம்போல.
கேர்ன் எனர்ஜி:
இந்த வீழ்ச்சியிலயும் கேர்ன் எனர்ஜி இன்னைக்கு 4 சத வீதம் கூடிச்சு. இந்தப் பங்கு மேல போனாலும் நிதானமா போகுது. கீழ இறங்குனாலும் நிதானமா இறங்குது. இப்போ இதன் விலை ரூ.200. சந்தை இறங்குரப்ப 180 - 190 அளவுல நான் இப்பங்கை வாங்கலாம்னு இருக்கேன்.

Friday, February 8, 2008

08.01.2008 இன்றைய பங்குத் தகவல்

வர்ர திங்களன்று ரிலயைன்ஸ் பவர் பங்குச் சந்தையில பட்டியலாறதுனால, திங்களன்று சந்தை மேலேறும்னு எதிர்பார்ப்பு இருக்கு. பொறுத்திரு பார்ப்போம், என்ன நடக்குதுன்னு
முதலீட்டுக்குரு வாரன் பஃபட்டின் பெர்க்ஷயர் நிறுவனக்கள்(மொத்தத் தொழிலாளர்கள் 2,20,000) கடந்த வருடம் ஜனவரில இருந்து செப்டம்பர் வரைக்கும் 90.2 பில்லியன் டாலர் வருமானமும், அதிலிருந்து 10.27 பில்லியன் டாலர் லாபமும் கிடைத்ததாம். அதாவது, முதலீட்டில் 15 சதவீதம் லாபம். நாம என்னடான்னா இன்னைக்கு ரூ.10 ஆயிரம் பங்கில் போட்டுட்டு அடுத்த வார/மாதமே அது இரட்டிப்பாகுமான்னு பார்க்கோம்.

Tuesday, February 5, 2008

05.01.2008 பரஸ்பர நிதி

நம்ம ஆளுங்க பங்குச் சந்தையிலோ, பரஸ்பர நிதியிலோ எதையாவது வாங்கிட வேண்டியது. அப்ப பார்க்க பங்குச்சந்தை குப்புர விழும். அப்புரம், வருத்தப்பட்டு என்ன பிரயோசனம். இங்க பாருங்க டயலாக்க.
2007 டிசம்பர் மாத இறுதியில் ரொம்பவும் பிஸியான (அதாவது, மின்னஞசல் அனுப்பினா அதில விஷயம் இல்லைனா பதிலெல்லாம் போட மாட்டார்) நண்பர் எனக்கு போன் செய்தார். அவருக்கு பங்குகள்/பரஸ்பர நிதி போன்ரவற்றில் நாட்டம் கிடையாது. ரியல் எஸ்டேட்தான் அவருடைய குறி.
நண்பர் : சிவா, கையில கொஞ்சம் பணம் இருக்கு.பரஸ்பர நிதியில போடலாம்னு இருக்கேன். 1 வருடம் கழித்து பணத்தை எடுத்திடுவேன்.

நான் : வங்கி வைப்பு நிதில போடு. பரஸ்பர நிதில போடனும்னா கடன்சார்ந்த நிதில 8 லிருந்து 10 சதம்வரை லாபம் கிடைக்கும். பரஸ்பர நிதில கிடைக்கற டிவிடெண்ட்க்கு வருமான வரி கிடையாது.

நண்பர் : அதுக்கு பேசாம நான் வங்கி வைப்பு நிதிலேயே போட்ருவேனே.

நான் : ஹைப்ரிட் பங்குகள்ள போட்டா 15 சதம் வரை லாபம் கிடைக்கும்.

நண்பர் : இந்த பாலன்ஸ் பண்ட்....

நான் : உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?

நண்பர் : நான் வங்கியில் வைப்பு நிதியில போடச் சென்றேன். அங்கிருந்த ஒருவர் பேலன்ஸ் ஃபண்டில் போடச்சொன்னார். வருடத்துக்கு 60 சதம்வரை பரஸ்பர நிதில லாபம் கிடைக்கும்.

நான் : ஏன் 60 சதம், 140 சதவீதம் லாபம் தர்ர நிதியெல்லாம் இருக்கு.

நண்பர்:பரஸ்பர நிதில போட்டா, முதலுக்கு ஒண்ணும் மோசம் இல்லயே? லாபம் வேணா குறையும். அப்படித்தானே?

நான் : அப்டின்னு உனக்கு யார் சொன்னது? பரஸ்பர நிதி பணத்தைக் கொண்டுபோய் பங்குச் சந்தைலதான போடப்போரான். பின் எப்படி நீ செய்யும் முதலீடு குறயாமல் இருக்கும்?
நண்பர் : அப்படின்னு அவந்தான்(வங்கியில் சந்தித்த நபர்) சொன்னான்.
நான் : சரி, நீ உன் கையில் உள்ள பணத்தை, பரஸ்பர நிதில போட்டுத்தான் ஆகணும்னா, ஒரு 5 நாள் பொறு . நான் ஊருக்குத் திரும்பி வந்ததும் என்னன்ன பேலன்ஸ்ட் ஃபண்டு இருக்குன்னு, அதற்க்குன்னு உள்ள வலைத்தளத்தைப் பார்த்து சொல்ரேன்.

இரண்டு நாள் கழித்து(01.01.2008) அதே நண்பரிடமிருந்து ஃபோன்.


நண்பர் : பணத்தை பேலன்ஸ்ட் நிதில போட்டுட்டேன்.

நான் : விண்ணப்ப படிவம்லாம் எங்க வாங்கினே?

நண்பர் : ஏற்க்கனவே சொன்னேனே.(வங்கில பார்த்த நண்பர்) அவந்தான் எல்லாம் கொடுத்தான்.
அந்தப்பணத்தை எதிலும் முதலீடு செய்யாமல் பல மாதங்களாக அப்படியே வைத்திருந்தேன்.

நான் : அப்படினாச் சரிதான். முடிஞ்சா எந்தந்த நிதில் போட்ருகேன்னு விவரமா சொல்லு. அவசரம் இல்ல. மெதுவா சொல்லு. நான் அவதானித்து அதுல எவ்ளோ லாபம் / நஷ்டம்னு சொல்ரேன்.

(மனதுக்குள்) இவ்ளோ நாள் பொறுத்தவன் இன்னும் ஒரு 4 நாள் பொறுக்கக்கூடாது?. இன்னும் 4 நாட்களில் பரஸ்பர நிதியில முதலீடு செய்தால் பிடிக்கப்படும் ந்ழைவுக்கட்டணம்(சும்மார் 2.5%) கிடையாது. அதெல்லாம் இவனுக்குத்தெரியாது. சொன்னாலும், அவனுக்கும் மனசு ரொம்ப கஷ்டப்படும்.

10 நாள்கள் கழித்து நண்பருக்கு ஃபோன் செய்தால் ஒரு பதிலும் இல்லை. சரி, மின்னஞ்சல் அனுப்பினால் , தான் அமெரிக்காவில் இருப்பதாக பதில்.


நான்(மனசுக்குள்) : நண்பன் அமெரிக்கவிலிருந்து வருவதற்க்குள் எப்படியும் 1 மாதம் ஆகும். அதற்க்குல்ல பங்குச்சந்தை பழயபடிக்கு மேல வந்திடும். அப்போ, அவருடைய ஃபோர்ட்போலியோ எவ்ளொ லாபம்/நஷ்டம்னு பார்த்து நண்பர்ட்ட சொன்ன போதும். அவருக்கு மனசுக்கு கஷ்டம் இருக்காது.

23 - ஜனவரி - 2008ல் நண்பர்னிடமுத்து ஃபோன்.

நான் : என்ன,அதுக்குள்ளாறவா திரும்ம்பிட்டே?

நண்பன் :ஆமாம்,போன வேலை முடிஞ்சிருச்சு. என்ன, நம்ம பரஸ்பர நிதியெல்லாம் எப்படி இருக்கு?

நான் : பங்குச்ச்சந்தை கொஞ்சம் டல். அவ்ளோதான்.அதனால பரஸ்பர நிதிலேல்லாம் தாக்கம் ஒண்ணும் ரொம்ப இல்ல.

மறுபடியும் ஒரு 10 நாள் கழித்து ஃபோன்.

நண்பர் : என்ன பங்குச்சந்தை ரொம்ப அடி பொல இருக்கு. டிவில செய்தில சொல்ரான்.

நான் : ஆமாமா. இன்னும் 2 மாதத்துக்கும்மேல ஆகும், கீழே விழுந்த பங்குச்சந்தை மேலே வர. அதுவரைக்கும் பொறுக்க வேண்டியதுதான். அப்படி மேல வந்ததும் நான் உனக்குச் சொல்ரேன்.

எனக்கு மனதில் ஒரு திருப்தி - "அப்பாடா, நான் ஒண்ணும் நண்பரை இந்த பரஸ்பர நிதியில் போடுன்னு சொல்லல".

Monday, February 4, 2008

04.02.2008 இன்றைய பங்குத்தகவல்

இந்தியா சிமெண்ட்ஸ் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி)

சென்ற வருடமும் ஜனவரியில் இதே மாதிரி பரிந்துரை செய்திருந்தார்கள். அப்போது ரூ.230க்கு இப்பங்கை வாங்கினேன். பின் இப்பங்கு ரூ.160வரை கீழே போனதாக ஞாபகம்.
எனெக்கென்னமோ,இந்தியா சிமெண்ட்டிலிருந்து பத்திரிக்கையாளர்களை அழைத்து வேண்டுமென்றே இவ்வாறு சொல்லியிருப்பார்களென்றே நினைக்கிரேன்.

மேலும், இண்டியா சிமெண்ட்ஸ் இண்டியன் பிரிமியர் லீகில் விளையாடும் சென்னை அணியை ஸ்பான்சர் செய்வதற்க்கு ரூ.354 கோடியை கொடுக்கிறார்களாம். இதெல்லாம் இந்தியா சிமென்ட்ஸுக்கு தேவையானதுதானா என்பது தெரியவில்லை.

இந்தியா சிமெண்ட்ஸின் அடிப்படையில் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை. அவர்களின் உற்ப்பத்தி விரிவாக்கத்தின் பலன் ஏப்ரலில் தெரியும் வரும்போல. அதாவது,கூடுதலாக உற்ப்பத்தி செய்யும் சிமெண்ட் ஏப்ரலில் விற்ப்பனைக்கு வரும்போல.ஆனால், விலை உயர்வு முன்பு போல - மூடைக்கு ரூ.160லிருந்து 250க்கு ஒரு வருடத்தில் வருவதெல்லாம் அவ்வளவு எளிதாக நடக்காது என்றே நினைக்கிரேன்.

Saturday, February 2, 2008

02.01.2008 இன்றைய பங்குத் தகவல் - ஆரம்பிச்சுட்டாங்கய்யா,ஆரம்பிச்சுட்டாய்ங்க

நேற்று சென்செக்ஸ் ஐரோப்பிய சந்தைகளை ஓட்டி 593 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இனிமேலும் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை.

சென்செக்ஸ் 19500ல் நின்றால், அதுக்குமேலேயும், இல்லையெனில் 16500க்கு வருமெனவும் நாணயம் விகடனில் சொல்கிரார்கள்.

நான் அப்பவே சொன்னேன்ல:

நவம்பரிலேயெ இப்படி சந்தை விழும்னு சொன்னாங்களாம். நான் நாணயம் விகடனை ஆரம்பத்திலிருந்து படித்து வருகிரேன். ஜூன் 2006ல் சந்தை விழும்வரை சொன்ன எச்சரிக்கைகள் ஓரளவு பலித்தது. அதற்க்கப்புரம், அவர்கள் சொன்ன எச்சரிக்கை எதுவும் பலிக்கவில்லை. அதன் பின், அவர்கள் எச்சரிக்கை செய்வதையே விட்டுவிட்டார்கள்! பல செய்திகளில் பயந்தபடியே, எனக்குக்கூடத்தான் சந்தை ஜனவரியில் விழலாம் என்று டிசம்பரிலேயே தெரிந்தது =) அதனால்,பரஸ்பர நிதியில் பணம் போடுவதை நிறுத்தி வைத்தேன்.

இந்தியா சிமெண்ட்ஸ்: விலை ரூ.204

நாணயம் விகடனிலும், தலாலிலும் பரிந்துரைத்திருக்கிரார்கள். மொத்த லாபம் 47 சதவீதமும், நிகர லாபம் 10 மடங்காகவும் ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளதாம். தென்னிந்தியாவில் சிமெண்ட்டுக்கான தேவை வருடத்துக்கு 10 சதவீதம் அதிகரிக்கிரதாம். இந்தியா சிமெண்ட்ஸுக்கு 12 - 14000 ஏக்கர் நிலம் உள்ளதாம். சிமெண்ட்டின் விலைகள் அப்படியே குறையாமல் இருக்குமாம். கடந்த 1 மாதத்தில் வர்த்தகமான பங்குகளின் அளவு அதிகரித்து இருப்பதால், இப்பங்கின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாம்.

நான் முன்பு இப்பங்கினை ரூ.310க்கு வித்தேன். இன்னும், கொஞ்சம் பங்குகள் - லாப பங்குகள் என்கிட்ட இருக்கு.

என் அபிப்ராயம் : பாகிஸ்தானிலிருந்து சிமெண்ட் ஏற்றுமதி செய்ய இன்னும் 5 நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாம். மேலும், விண்ணை முட்டும் அளவிற்க்குப்போன ரியல் எஸ்டேட் விலைகளும் குறைய ஆரம்பித்துள்ளனவாம். அதனால், இனிமேல் சிமெண்ட்டின் விலை இதைவிடக் கூடுவதற்க்கு வாய்ப்பு இல்லை. அதனால், சிமெண்ட் பங்குகளின் விலையும் முன்புபோல் வேகமா ஏராதுன்னு நினைக்கிரேன்.

டாட்டா மோட்டார்ஸ்: விலை ரூ.754
நேத்து இப்பங்கு கிட்டத்தட்ட 7 சதவீதம் உயர்ந்தது. இப்பங்கு ரூ.780 - 800 வந்தால் விற்றுவிட்டு விலை குறைந்ததும் திரும்ப வாங்கலாம் என்றிருக்கிரேன். இன்னும் ஒரு வாரத்தில் டாட்டாவின் ஜாகுவார்-லேண்ட் ரோவர் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகுமாம். அப்போது இப்பங்கின் விலை குறைய வாய்ப்புள்ளதுன்னு சொல்ராங்க.