Thursday, July 31, 2008

31.07.2008 இன்றைய பங்குத்தகவல்

பங்கு சந்தையைப் பாதிக்கக்கூடிய உள்நாட்டுக்காரணிகள் பெரியதாய் எதுவும் இல்லை. பணவீக்கமும் 12 சதவீதத்துக்கு அருகில்தான் இருக்கு. முந்தாநாள் நடந்த மத்திய ரிசர்வ் வங்கி வட்டிவீதம் உயர்வு, சி.ஆர்.ஆர் உயர்வு போன்றவை கடந்த 2 மாதமாவே எதிர்பார்த்ததுதான். அதற்க்குச் சந்தை இப்படி பெரிய எதிர்வினை(சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைவு) செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. வியாபாரிகள் "ஷார்ட் செல்" பண்ணியிருக்காங்க போல. நேத்து அதற்க்கு "கவர்" செய்ததால் சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்ந்ததாம்.

இப்போது உள்ள சூழ்நிலையில் ஏற்கனவே வாங்கியிருந்த பங்குகளை குறைந்த விலையில் நஷ்டத்துக்காக என்றாலும் விற்றுவிட்டு வெளியே வருவதுதான் புத்திசாலித்தனம்போல இருக்கு.

ஏதாவது நல்ல பங்கு திடீரெனென்று மிகக் குறைந்த விலைக்குக் கிடைத்தால் வாங்கி சில நாட்கள் வைத்திருந்து பார்கலாம். நேற்று முந்தினம் சன் டிவி சுமார் 15 சதவீதம் குறைந்து ரூ.330 என்ற அளவில் கிடைத்தது.

கேர்ன் போன்ற பெட்ரோலியப் பங்குகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும்போது வாங்கி வைக்கலாம்.

Tuesday, July 8, 2008

08.07.2008 இன்றைய பங்குத்தகவல்

சென்செக்ஸ் 12500,12000வரை போகுமாம். அதனால கொஞ்ச கொஞ்சமா பங்குகளை, முக்கியமா ஏ குரூப் பங்குகளை வாங்கணுமாம்.சந்தை மேலேறும்போது லாபம் வருமாம். என்னைத்த வாங்கறது? ஏற்க்கனவே எல்லாத்தையும் வாங்கியாச்சு. அப்ப சந்தை மேலேறும்வரை பார்த்திட்டு இருக்க வேண்டியதுதான்.

சந்தையை மேலேற்றுவதற்க்கான வலுவான காரணம் ஓண்ணும் இப்போ இல்ல. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தினமும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சென்செக்ஸ் 13000க்கு கீழே இறங்கும்போது உள்/வெளிநாடு முதலீட்டாளர்கள் கொஞ்சம் வாங்குறாங்க. அமெரிக்க "டோ ஜோன்ஸ்" 10,000ஐ தொடும்னு பயம் காட்றாங்க. கச்சா எண்ணெய் இப்பத்தான் பீப்பாய்க்கு 141 டாலருக்கு வந்திருக்கு.சர்வதேச பங்குச் சந்தையில அடி வாங்கினவங்கள்ளாம் கமாடிடி(கச்சா எண்ணை)க்கு போய்ட்டாங்களாம். அப்போ சர்வதேச கமாடிடி சந்தைக்கு ஒரு அடி இருக்குன்னு சொல்றாங்க கச்சா எண்ணை பீப்பாய்க்கு 100 டலருக்கு வந்து நிற்க்குமாம். வரும் 10ஆம் தேதி அளவில் இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவ அறிவிக்க ஆரம்பிச்சதும் சந்தை மேலேரலாம்னு சொல்றாங்க. இந்தியா கம்பெனிகள் "நல்ல ஆரோக்கியமா" - அடிப்படை வலுவா இருக்கறதால ஒண்ணும் கவலைப்பட வேண்டாமாம். அதான், ஸ்டீல் போன்ற பொருட்களின் விலையை கன்னா பின்னானு ஏத்திடுறாங்களே(ஸ்டீல் விலை 3 மாதத்தில் டன்னுக்கு விலை ரூ.30,000 லிருந்து ரூ.45000/50000ஆ ஏத்திட்டாங்களாம்). பிறகு கம்பெனிகளுக்கு எப்படி லாபம் குறையும்?

என் நண்பரொருவர் தரகு வலைத்தளத்தில் லாகின் செய்ய முயன்றார். அவருக்கு தன் பாஸ்வோர்ட் மறந்துவிட்டது. உடனே அருகிலிருந்த மற்றொரு நண்பர் இன்று "பிஸினஸ் லைனில்" வந்த ஜோக்கை காண்பித்து சிரித்தார். அந்த ஜோக் "திரு.ராவ்தான் மிகச் சிறந்த முதலீட்டாளர். ஏனென்றால்,அவர்தான் தன் தரகு வலைத்தளத்தில் தன்னோட பாஸ்வோர்டை மறந்து விட்டார்" =)))

Tuesday, June 10, 2008

10.06.2008 இன்றைய பங்குத்தகவல்


வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க(அந்த அப்பாவி யாருன்னு பின்னூட்டத்தில தெரிஞ்சுக்குங்கோ) அப்பப்போ ஏதாவது கிறுக்கலாம்னு இருக்கேன்.

நேத்து சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்குமேல குறைஞ்சதால இன்னைக்கு அது கொஞ்சம் மேலேறும்னு நினைச்சேன்.(நீ என்னைக்கு நினைச்சு அது சரியா வந்துருக்கு?)

சென்செக்ஸ் 14000 வரை கீழே போகுமாம்.(அப்புறம் 12000 வரை போகும்,அப்புறம் 10000, அப்புறம் 8000. எப்போ பூஜ்யம் வரும்?)

ரியல் எஸ்டேட் பங்குகளேல்லாம் வெளியீட்டு விலைக்கு கீழே இருக்குது. அதனால, அந்த பங்கையெல்லாம் இப்போதிருந்தே வாங்கி சேர்க்க ஆரம்பிக்கலாமாம்(அதுதான் கையிருப்பில் உள்ள எல்லா பணத்துக்கும் வாங்கி முடிச்சாச்சே. அப்புறம் எங்கே வாங்கறது?)

இன்னும் 2 வாரத்துல மழைக்காலம் ஆரம்பிக்குமாம்(இப்படித்தான் 10 நாளா சொல்லிட்டு இருக்காங்க). அப்போது சென்செக்ஸ் மேலே எற ஆரம்பிக்குமாம்.

கச்சா என்ணெய் ஒரு பீப்பாய் 137 டாலருக்கு மேல பறக்கிறதால என்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு வரும்போது வாங்கலாம்னு இருக்கேன்.

Friday, April 11, 2008

11.04.2008 இன்றைய பங்குத்தகவல்

பங்குச்சந்தை அப்பப்ப 100/200 புள்ளிகள் அதிகரிக்கறதும், பின் அதே அளவு குறையறதுமா இருக்கு.
கேர்ன் எனர்ஜி

சென்ற வருடம் ஐபிஓ-வில் ரூ.160க்கு வாங்கினேன். பின் ரூ.145க்கு சராசரியாக்கினேன். இவ்வருடம் ரூ.200க்கு சில காரணங்களால் பிப்ரவரியில் விற்றேன். மறுபடியும் அதே விலைக்கு வராதா என காத்திருந்தேன்.சென்ற மாதம் 24ஆம் தேதி ரூ.195க்கு கிடைத்தது.இப்போது அதன் விலை ரூ.250

பி ஹைச் யி எல்(BHEL)
சென்ற வாரம் 3 நாட்களில் சுமார் ரூ.400 குறைந்தாது.என் நண்பர்கள் சிலர் ரூ.1700க்கு வாங்கினார்கள். எனக்கு ரூ.1870க்கு கிடைத்தது(அவரசக்குடுக்கை !!!). இப்போது அதன் விலை ரூ.1829

சந்தையில் குறிப்பிட்ட பங்கு 2,3 நாள் குறைந்து வரும்வரை பொறுத்திருந்து வாங்கினால் லாபம் கிடைக்கும். அடிப்படையில் வலுவான பங்காக இருக்கும்பட்சத்தில், இப்போது விலை கூடாவிட்டாலும் பின்னால் கூடும் என்று எதிர்பார்க்க வேண்டியதுதான்.

Thursday, March 13, 2008

13.03.2008 இன்றைய பங்குத்தகவல்

சென்ற வாரம் சுமார் 1850 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்தது.அதனால், இந்த வாரம் 10,11,12 தேதிகளில் புள்ளிகள் உயர்ந்து இன்று 13ஆம் தேதி விழும் என்று சொல்லியிருந்தாங்க. இது ஏதோ டெக்னிகல் பவுன்ஸாம். சொன்ன மாதிரியே நேற்று 12:30 மணியிலிருந்து விழ ஆரம்பித்தது.10ஆம் தேதி காலையில் சுமார் 550 புள்ளிவரை குறைந்தது. பி-நோட் பற்றிய வதந்தியால் அது மேலேற ஆரம்பித்தது.
என் நண்பர் ஒருத்தர் சென்ஸெக்ஸ் 12000 வரும்வரை காத்திருக்கப்போவதாகவும் அதன் பங்குகளை வாங்கபோவதாகவும் சொல்றார்.
ஜிண்டால் ஸ்டீல் & பவர்
சென்ற வெள்ளியன்று சரியாக ரூ.2000க்கு வாங்கினேன். நேற்று ரூ.2170க்கு விற்றேன். சுமார் 7% லாபம். சந்தை ஒரு நிலைக்கு(stabilise) வர்ர வரை இப்படி ட்ரேட் பண்ணிக்க வேண்டியதுதான்.
கேர்ன் எனர்ஜி
இந்த நிலையிலேயும் நேற்று அதன் அதிகபட்ச அளவான ரூ.252ஐ தொட்டது. ரூ.200க்கு வந்தால் வாங்கலாம் என்றிருக்கிரேன்.

Wednesday, February 27, 2008

27.02.2008 இன்றைய பங்குத் தகவல்

நேத்து ரயில்வே பட்ஜெட்னால சென்சென்க்ஸ் அதிகமாச்சாம். ஆனால்,வெள்ளிக்கிழமை தாக்கலாகபோற பட்ஜெட்னால, கம்பெனிகள் மகிழ்ச்சியடையும்படி ஒண்ணும் இருக்காதாம். இந்த பட்ஜெட் வரப்போர நாடாளுமன்ற தேர்தல மனசுல வச்சு தயாரிக்கப்படுமாம். அதனால், பங்குச்சந்தைக்கு வெளிநாட்டு முதலீடு அதிக அளவில் வராதாம். அதனால, பங்குச் சந்தை இப்போதைக்கு உயர்ரதுக்கு வாய்ப்புள்ளயாம்.
ஜனவரில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.17000 கோடிக்கு பங்கை வித்தாங்களாம். பிப்ரவரில ரூ.5000 கோடிக்கு வாங்கி "சராசரி" செய்தாங்களாம்.

இந்த வருடம் 2008ல "தனியார் ஈக்விடி"(Private Equity) செஞ்ச முதலீட்ல 30 சதவீதத்துக்குமேல நஷ்டம் ஆயிடுச்சாம்.

எந்தப்பத்திரிக்கைய எடுத்தாலும் சென்செக்ஸ் 16000க்கு பக்கத்துல வரும்னு சொல்ராங்க. அது அப்படி வருமோ வராதோ, இந்த மாதிரி செய்திகளப் படிச்சுட்டு சில்லறை முதலீட்டாளர்கள் எல்லாரும் விக்க ஆரம்பிப்பாங்க. அப்ப சென்செக்ஸ் 16,000க்கு வந்துடும் ==)))

Thursday, February 21, 2008

21.02.2008 இன்றைய பங்குத் தகவல்

இன்னும் ரெண்டு,மூணு நாளைக்கு நிஃப்டி 4950/5000(சப்போர்ட் லெவெல்) போகும்வரைக்கும் பங்குச்சந்தை இப்படியேத்தான் போகுமாம். அடுத்த வியாழனுக்கு முன்பு, F&Oக்கு இந்த மாத முடிவு தேதிக்கு முன்பு, ஷார்ட் கவரிங் இருக்குமாம்.

ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் தின வர்த்தகம், ஸ்விங் ட்ரேட் செய்து பார்க்கலாம்.

உங்களுக்குத்தெரிந்த பங்கு, நீங்கள் எதிர்பார்த்த, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்போது, வாங்கி 3,5 நாட்கள் பொறுத்திருந்து சுமார் 5%,10% லாபம் என்று கிடைக்கும்போது விற்று விட்டு வெளியேறி விடலாம்.