Friday, November 30, 2007

30.11.2007 பங்கு பரிந்துரைகள்

01.12.2007ம்தேதிய நாணயம் விகடனின் நீண்டகாலத்துக்கான பங்கு பரிந்துரைகள்
லார்ஜ் கேப்

1.ஏசியா ப்ரௌவுன் பவேரி(ABB)
2.ஆக்ஸிஸ் பேங்க்
3.பாரத் ஹெவி எல்க்ட்ரிகல்ஸ்
4.மாருதி சுஸுகி
5.பாரத ஸ்டேட் வங்கி

6.டாடா மோட்டர்ஸ்

மிட் கேப்
1.க்ளேன் ஃபார்மா
2.பாரத் பிஜ்லீ
3.3ஐ இன்ஃபோடெக்
4.ஸ்டெர்லைட் ஆப்டிகல்ஸ்
5.மெட்ராஸ் சிமெண்ட்ஸ்
6.வொக்கார்ட்


ஸ்மால் கேப்
1.இண்டோ டெக் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்
2.திவான் ஹவுசிங்

3.வெசுவியஸ் இந்தியா

Wednesday, November 28, 2007

28.11.2007 சூதாட்டப் பங்குகள்

தலாலின் 26.11.2007ன் சூதாட்டப் பங்குகள்

1. இஸ்பாட் இண்டஸ்ட்ரீஸ்
2. ஷிவ் வாணி ஆயில் அன்ட் கேஸ் எக்ஸ்ஃப்ளோரேஷன்
3. ஓமக்ஸ்
4. கருட்டூரி நெட்வொர்க்ஸ்
5. பினானி இண்டஸ்ட்ரீஸ்
6. சிண்டிகேட் பாங்க்
7. ஷர்டூல் செக்யுரிடீஸ்
8. கோடே இண்டியா

28.11.2007 குறுகிய கால முதலீடு,பங்கு வணிகம்,சூதாட்டம்

என்னதான் நீண்ட கால முதலீடு என்று பங்கு வாங்கினாலும், குறுகிய காலத்தில் லாபம் பார்க்காமல் மனது பொறுப்பதில்லை.

பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஒரே நாளில் 500,700 என்று கீழிறங்குகிறது / மேலேறுகிறது. நிறைய பங்குகள் காரணமே இல்லாமல் திடீரென கன்னாபின்னாவென மேலேறுவதும் கீழிறங்குவதும், பங்கு வணிகம்(டிரேடிங்) கன ஜோராக நடந்துகொண்டிருப்பதை உறுதி செய்கிறது.

ஒவ்வொரு முதலீட்டாளருக்குள்ளும் ஒரு டிரேடர்/சூதாடி இருப்பர். அவர் சீக்கிரம் பணம் பண்ண வேண்டும் என்று நம்மை நச்சரித்துக்கொண்டு இருப்பார். அதையும் முயற்சி செய்து பார்க்கலாமே. லாபமோ நட்டமோ அவரவர் திறமை / அதிர்ஷ்டத்தைப்பொறுத்தது.

என்ன பங்கில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று பார்த்தால் இப்படி சூதாட இவன் வழி சொல்ரான்னு நினைக்க வேன்டாம். "களவும் கற்று மற" என்ற ஆன்றோர் வாக்கிற்க்கு ஏற்ப நாமும் நடக்கணுமில்லயா? என்னவோ ஆன்றோர் சொல்லி எல்லாம் கேட்ட மாதிரி!

இதற்க்கான காரணத்தை அடுத்து வரும் பதிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

எஸ்ஸார் ஆயில் என்று கேள்வியே படாத பங்கு ஒரே நாளில் சுமார் 12 கோடி பங்குகள் ரூ.2350 கோடி அளவுக்கு வியாபாரமாயுள்ளன என்பதிலிருந்தே டிரேடிங் பெரிய அளவில் போய்கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.அதில் டெலிவெரி சதவீதம் வெரும் 7 தான்.மீதி சதவீதம் வெறும் வணிகம்தான்.

இனிமேல் சூதாட்டத்தை கௌரவமாக தின வணிகம்(ஒரே நாளில் செய்யாமல் சில நாட்களில் வணிகம் செய்தாலும்) என்றே சொல்லிக்கொள்ளலாம்!

வீட்டில் இண்டெர்னெட் தொடர்போ அல்லது ப்ரௌசிங் மையத்தில் டிரேடிங் செய்யும் வசதியோ அல்லது அலுவலகத்தில் வேலை அதிகம் இல்லாமல் ஈ ஓட்டிக்கொண்டிருந்தால் தான் தின வணிகத்தில் ஈடுபட முடியும். நான் அவ்வபோது செல்லும் ப்ரௌவுசிங் மையத்திற்க்கு ஒருவர் சரியாக காலை 10 மணியளவில் தண்ணீர் பாட்டிலுடன் வந்துவிடுவார். அவர் சந்தை முடியும் நேரம் பிற்பகல் 3:30 மணி வரை இருப்பார். விசாரித்த போது அவருக்கு அதுதான் முழு நேரத்தொழிலாம்.

தின வணிகத்தில் கவனிக்க வேண்டியது

1.நாம் தின வணிக்த்தில் ஈடுபடும் தினத்தன்று எவ்வளவு பணம் இழக்கத்தயாராய் இருக்கிறமோ, அதுவரைக்கும் டிரேடிங்கில் ஈடுபடுவது. உதாரணமாக ரூ.1000 என்று வைத்துக்கொள்ளலாம். நஷ்டம் வந்தால் ரூ.1000உடன் நிறுத்திகொள்ளனும். விட்டதைப் பிடிக்கிறேன் என்று மற்ற நல்ல பங்குகளை விற்று தின வணிகத்தில் ஈடுபடக்கூடாது.

2. தொலைக்காட்சி,இணையதளத்தில் டெக்னிகல் அனலிஸ்ட்கள் சொல்வதை கேட்கலாம் அல்லது www.poweryourtrade.com போன்ற கட்டண வலைத்தளத்தில் உறுப்பினராகச் சேர்ந்துகொள்ளலாம். அவர்கள் அன்றன்றைக்கான தின வணிகப் பரிந்துரையை மிண்ணஞ்சல், குறுந்தகவல்மூலம்உங்களூக்கு அனுப்பிவிடுவார்கள்.

3.குறிப்பிட்ட நிறுவனகளைப் பற்றிய நல்ல/கெட்ட செய்தி வந்தால் அந்த பங்கின் விலை சடாரென ராக்கெட் வேகத்தில் பறக்கும்/விழும். பிரபலமான வாகன உற்பத்தி நிறுவனமான் வால்வோ, அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பங்குகளை வாங்கப் போகிறது என்ற செய்தியினால் அசோக் லேலண்ட் பங்கு நேற்று 10 சத வீதம் கூடியது. இதேபோல் செய்திகளால் அடிபடும் பங்கில்தான் தின வணிகம் செய்வது நல்லது.

4.முதல் அரை மணி நேரத்திற்க்கு, சந்தையின் போக்கை கவனித்துக்கொள்ள வேண்டும் ஏறுமுகமா, இல்லை இறஙுகுகமா என்று. சில சமயஙளில் முதல் அரை மணி நேரத்திற்குப்பின் பங்கின் போக்கு எதிர்மறையாய்ப் போய்விடும்.

5.தின வணிகத்தில் முதலீட்டில் செய்வதுபோல் அல்லாது,பங்கு ஏறும்போது வாங்க வேண்டும்,இறங்கும்போது விற்க்க வேண்டும்.

6. அதிக எண்ணிக்கையில்(லட்சத்தில்,மில்லியெனில்) பரிவர்த்தனை ஆகும் பங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் (நஷ்டத்தில்) விற்கும்போது பங்கை வாங்க ஆளிருக்கும்!

7. நஷ்டம் தவிர்த்தலை(ஸ்டாப்-லாஸை) கட்டாயமாக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது ரூ.100 விலயுள்ள பங்கை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அது மேலே போகாமல் 95க்கு இறங்குவதாக வைத்துகொள்வோம். இனிமேல் அந்தப் பங்கு மேலேறாது என்று உறுதியா தெரிந்தால் உடனே விற்றுவிடவேண்டும். அதேபோல் அந்த பங்கு மேலேறினால் குறிப்பிட்ட அளவுக்குமேல் ஏறாது. 125க்கு மேல் ஏறாது என்று வைத்துக்கொள்வோம்.120 வந்தவுடன் அது மேலேறுமா என்று கவனித்து அது கீழே இறங்க ஆரம்பித்தவுடன் 108,109 என்று எதவது ஒரு விலையில் விற்றுவிட்டு லாபம் பார்த்துவிடலாம்.

8.தின வணிகம் செய்யும்போது தொடர்ந்து நட்டம் வந்தால், "ச்சீ, இந்தப் பழம் புளிக்கும்" என்று தின வணிகத்துக்க் முழுக்கு போட வேடியதுதான்!







Thursday, November 22, 2007

22.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.

நான் வாங்கிய பங்கு : ஹெங்கல் இண்டியா

"ஹெங்கோ ஸ்ட்ரெயின் சேம்பியன்" என்ற டிடர்ஜண்ட் பௌடரை இந்த நிறுவனம்தான் வெளியிடுகிறது. இந்த பங்கிற்க்கு நாணயம் விகடனிலும் பின் எகனாமிக் டைம்ஸிலும் பரிந்துரை வந்தது. ஏப்ரலில் இந்த பங்கை ரூ.23.11க்கு(தரகு,வரிகள் உட்பட) வாங்கினேன். இன்று அதன் விலை 23.

நேற்று முன் தினம் எல்லாப் பங்குகளும் வகை தொகையில்லாமல் விலையேறியபோது இந்தப் பங்கும் 15 சத வீதம் விலை ஏறியது. இந்த மாதிரி பங்குகள் எப்போது விலை ஏறும் என்று தெரியாது. அதற்க்கு வருடக்கணக்கில்கூட ஆகலாம். அவ்வளவுநாள் காத்திருக்க பொறுமையில்லாதவர்கள் இந்த மாதிரி நல்ல விலை கிடைக்கும்போது விற்றுவிட்டு வெளியேறுவதுதான் நல்லது.
இன்னும் என்னிடம் யுனிடெக்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,ரிலையன்ஸ் பெட்ரோலியம் போன்ற நிறைய பங்குகள் இருக்கின்றன.


பங்கை எந்த விலையில் வாங்குவது?
நல்ல பங்கை கண்டுபிடிப்பதுகூட அவ்வளவு சிரமமில்லை. ஆனால், அதன் வாங்கும் விலையை கண்டுபிடிப்பதுதான் மிகவும் சிரமம். நாம் வாங்கியவுடன் விலை குறையும்,விற்றவுடன் விலை கூடும். நம்ம ராசி அப்படி! வாங்கும் விலை தெரிந்தால்தான், அந்தப் பங்கின் விலை குறையும்போது வாங்கி "சராசரி"(ஆவரேஜ்) செய்வதற்க்கு உதவியாக இருக்கும். ஒரு நிறுவனத்தின் மொத்த பெறுமான மதிப்பை(Enterprise Value) வைத்து, இன்ன விலைக்கு இந்தப் பங்கை வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறுவார்கள். வோடாபோன் நிறுவனம் ஹட்சை வாங்கும்போது அதன் நிறுவன மதிப்பு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்வார்கள். அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஒரு பங்கு நிபுணர் சிஎன்பிசியில் இண்டியா சிமெண்ட் ரூ.306 வரை போகும் என்றார். எப்படி இவ்வளவு துல்லியாய் சொல்கிறார். இவரல்லவோ சிறந்த பங்கு நிபுணர் வியந்து போனேன்! இந்தியா சிமெண்ட்ஸின் ஆண்டறிக்கையை படிக்கும்போதுதான் தெரிந்தது, அந்த விலைக்குதான் பின்னாளில் மாற்றத்தகுந்தவாறு கடன் பத்திரங்களை வெளி நாட்டு நிறுவன முதலீட்டாளர் இண்டியா சிமெண்ட்ஸிடமிருந்து வாங்கியிருக்கிறார் என்று.

சரி பங்கு என்ன விலைக்கு வாங்கலாம் என்று தெரிந்துவிட்டது. உடனே வாங்கிடலாமா? கூடாது.தொடர்ந்து நாம் வாங்கப்போகும் பங்கை கவனித்து வந்தால்தான் அந்தப் பங்கு என்ன அதிக விலைக்கு மேலே போகும்,என்ன குறைந்த விலைக்கு கீழெ வரும்(விழும்) என்று தெரியும். இண்டியா சிமெண்ட்ஸ் 310,320 வரைக்கு மேலே போகும். 260 வரை கீழே வரும். இந்த விலையில் வாங்கலாம் என்று தெரிகிறது.


எத்தனை பங்குகள் வாங்கலாம்?
நீங்கள் மொத்தம் வாங்க நினைத்திருக்கும் எண்ணிக்கையிலான பங்குகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாங்கலாம். அதாவது,உதாரணத்துக்கு, 1000 பங்குகள் வாங்கு வேண்டும் என்று நினைத்திருந்தால் அவ்வப்போது சந்தை சரியும்போது 50,100 என்று வாங்கலாம். அல்லது ரூ.5000,ரூ.10000க்கு எந்த எண்ணிக்கையில் பங்கு வாங்க முடியுமோ அந்த எண்ணிக்கையில் வாங்கலாம்.


பங்கை எப்போது விற்க்கலாம்?
நீண்ட கால முதலீட்டாளர்க்கு வாங்கிய பங்கை விற்க்க வேண்டிய அவசியமே இல்லை. அவசியம் நேரும்போது விற்க்க வேண்டும் எனில் அந்தப் பங்கின் விலை அதிகமாய் இருக்கும்போது விற்கலாம். அல்லது, எப்போதும் 2,3 சதவீதம் கூடும் பங்கின் விலை திடீரென 8,10 சதவீதம் கூடினால் அப்போது விற்று, திரும்ப அந்தப் பங்கு குறைந்த விலைக்கு கிடைக்கும்போது வாங்கலாம்.ஆனால்,இந்த மாதிரி விற்ற விலையைவிட குறைந்த விலைக்கு வரும்போது வாங்குவது அவ்வளவு எளிதானது அல்ல.

Tuesday, November 20, 2007

20.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.

நான் வாங்கிய பங்குகள்:

பி ஹைச் இ எல்(BHEL):

03.04.2007 அன்று
தீபக்கின் ப்ளாக்கில் வந்த ஆய்வுரையின்படி இந்தப் பங்கை வாங்கணும் என்று முடிவெடுத்தேன். பின் மாதக்கடைசியில் ரூ.2495க்கு வாங்கினேன். மே மாத இறுதியில்(என்று நியாபகம்) போனஸ் 10 பங்குக்கு 10 பங்கு கிடைத்தது. அதனால் விலையும் சரிபாதியாய்க் குறைந்தது. அதாவது, வாங்கிய பங்குகள் 20 என்றும், விலை 1250 என்றும் ஆகியது. ஜூன் மாதம் 10 பங்குகளை பங்கொன்றிற்க்கு 1407 என்ற விலையில் வித்தேன். மீதி 10 பங்குகளையும் 1705 என்ற விலையில் வித்தேன்.


லாபம் = 10*(1407 - 1250)+10*(1705 - 1250) = 1570+4550 = 6120

சுமார் 25 சதவீத வளர்ச்சி, அது மிகக் குறுகிய காலத்தில் - 3 மாதத்தில். அதாவது, ஒரு வருடத்தில் பணம் இரட்டிப்பாகிறது. இன்று அப்பங்கின் விலை 2650. விற்க்காமலே வைத்திருந்தால்,வருடத்திற்க்கு 400 சதவீததிற்க்குமேல்.
அடிப்படையில் நல்ல நிறுவனம் என்று தெரிகிறது. பங்கின் விலையும் நன்றாக அதிகரிக்கிறது. அப்புறம் எதற்க்கு விற்க்க வேண்டும்? எல்லாம் லாபம் பார்க்க வேண்டும் என்ற (அற்ப) ஆசைதான். அதற்க்காக அந்தப் பங்கை திரும்பவும் வாங்காமல் விட்டுவிடுவோமா? ஆகஸ்ட் 16ல் பங்கு சந்தை விழுந்தபோது 1615 என்ற விலையில் வாங்கினேன்.
கணிணி முலம் எளிதாக பங்கு வணிகம் செய்பவர்கள்,லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதிரி அவ்வப்போது விற்று லாபம் பார்க்கலாம். இல்லாவிடில் அப்படியே விட்டு வைப்பதுதான் உத்தமம். இப்படி அடிக்கடி விற்று வாங்குவதால் நமக்கு லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, அந்த பங்கு வணிக வலைதளத்தை நடத்தும் தரகு நிறுவனத்திற்க்கு தரகு மூலம் நல்ல லாபம்!

Monday, November 19, 2007

19.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.

நான் வாங்கிய பங்குகள்:

இண்டியா சிமெண்ட்ஸ்:

நாணயம் விகடனில் வந்த பரிந்துரையை வைத்து ஜனவரி முதல் வாரத்தில் ரூ.232க்கு கொஞ்சம் பங்குகளை வாங்கினேன். பிறகு சில நாட்களில் 206க்கு வாங்கினேன். இன்னும் சில நாட்களில் 199க்கு வந்த போது மறுபடியும் கொஞ்சம் பங்குகளை வாங்கினேன். அதற்கப்புறம் அது 166க்கு வந்தபோது நொந்துபோனேன்.

இது அடிப்படையில் மிகவும் நல்ல பங்கு.கடந்த காலாண்டுகளில் நல்ல லாபம் ஈட்டியுள்ளது.செய்திகளின்படி சிமெண்ட் தேவைப்பாடு மிக நல்ல அளவில் இருக்கிறது.அப்படி இருந்தும் ஏன் பங்கின் விலை குறைந்தது?

ஒரு பங்கின் விலை அதன் அடிப்படையை(அதன்பங்கு லாபம்,எதிர்கல வாய்ப்பு) மட்டும் வைத்து முதலீட்டாளர் வாங்குவதில்லை. சிமெண்ட் தேவை பருவ கால மாற்றத்துக்குட்பட்டது. வெயில் காலத்தில் நன்றாகவும் மழைக்காலத்தில் குறைவாகவும் தேவைப்பாடு உள்ள பொருள். சிமெண்ட் விலை கடந்த ஒரு வருட காலத்தில் இரட்டிப்பாகியிருக்கிறது.அதன் விலையைக்கட்டுப்படுத்த வேண்டும் என்று எல்லாரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போதும் சொல்கிறார்கள்.உடனே சிமெண்ட் நிறுவனப் பங்குகளின் விலைகள் குறைந்தன.அதன் விலையை மட்டுப்படுத்தும்பொருட்டு அந்த சமயத்தில் சிமெண்டுக்குஅதிக வரி விதிக்கப்பட்டது. அப்போதும் சிமெண்ட் பங்குகளின் விலை குறைந்தன.ஒரு கட்டத்தில் பங்கின் விலை 160க்கு வந்தது. அப்போது ஏதோ ஒரு நிறுவனம் நிறைய எண்ணிக்கையில்(லட்சக்கணக்கில்) இந்த நிறுவனப் பங்குகளை வாங்கினார்கள். இதை ப்ளாக் டீல் என்கிறார்கள். இந்த விபரங்களையும் இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம். அந்த மாதிரி நிறுவனங்கள் நம்மைப்போல் சாதாரணமான் முதலீட்டாளர்கள்போல் கிடைத்த விலைக்கு எந்தப் பங்கையும் வாங்க மாட்டர்கள்.ஒரு பங்கு இவ்வளவு பெறும் என்று கணக்கிட்டு வாங்குவார்கள்.அதனால் பங்கின் விலை குறைந்தது.

அப்புறம் முதல் காலாண்டு முடிவு அறிவிக்கப்பட்டவுடன் பங்கின் விலை கூடியது. 2வது காலண்டு முடிவு அறிவிக்கப்படும்முன் பங்கு விலை 316வரை போனது.சில வாரங்களில் அது 260க்கு வந்தது. இப்போது(19அக்டோபர்2007) 311க்கு வந்து விட்டது.

அதனால் இப்பொதெல்லாம் விலை குறையும்போதெல்லாம் 10,30 என்று இந்த பங்கை வாங்குகிறேன்.

Sunday, November 11, 2007

12.11.2007 பங்கு வதந்தி

தலால் ஸ்ட்ரீட் வதந்தி

ஷக்தி பம்பின் பங்கு விலை கன்னாபின்னாவென்று ஏறுமாம்.ஏற்றபபடும் என்பதுதான் சரி =)

11.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.

பங்கு வாங்கணும்னு முடிவு பண்ணியாச்சு.

நான் நாணயம் விகடனில் "ரூ.2000-ல் பங்கு வாங்குவது எப்படி?" என்பதைப் பார்த்துத்தான் பங்கு வாங்க ஆரம்பித்தேன்.

டீமேட் எண் வாங்குவதற்க்கு ரூ.500மீதி 1500க்கு ரூ.10 விலையுள்ள 150 பங்குகள் வாங்கலாம். இது புதியதாக பங்கு சந்தையில் நுழைபவர்க்கு, பங்கு வாங்குவது எப்படி?" என்ற அறிமுகம் கொடுத்த அளவில் சரி.

ஐசிஐசிஐ,ஷேர்கான்,ரிலையன்ஸ் போன்றவைமூலம் டீமேட் கணக்கு தொடங்கலாம். அதற்க்கு பான் அட்டையும், வங்கிக்கணக்கும் அவசியம்.

என்ன பங்குகளை வாங்குவது?
தினத்தந்தி,நாணயம் விகடன் போன்றவற்றில் வரும் பங்கு பரிந்துறைகளை சிஃபி.காம், மணிகண்ட்ரோல் போன்ற பங்கு சம்பந்தமாக உள்ள தளங்களில் நமது பெயரில் ஒரு அக்கௌண்ட் திறந்து அதில் இந்த மாதிரி பங்குகளின் தகவல்களை-விலை,தேதி போட்டு வைத்துக்கொள்ளலாம் .

ஒரு 3 அல்லது 6 மாதங்கள் கவனித்து வந்தால் அதில் எந்த பங்கை வங்குவது என்பது புரியும்.

நான் ஷேர்கானில் புதிதாக டீமேட் கணக்கு தொடங்குவதற்க்காக மே 2006ல் அங்கு ஒருவரைச் சந்தித்தேன். எவ்வளவு குறைந்த அளவு பங்கு வாங்கினாலும் ரிலையன்ஸ் போன்ற அடிப்படையில் நன்றாக உள்ள பங்கை வாங்குமாறு சொன்னார்.அப்போது அப்பங்கின் விலை சுமார் 1000. இப்போது அதன் விலை ரூ.2734 =)


எப்போது வாங்குவது?
மார்க்கெட் ஒவ்வொரு 2 அல்லது 3 மாதத்துக்கு ஒரு முறை ஏதாவது காரணத்தினால் விழும். கடைசியாக அக்டோபர் 17ம் தேதியன்று "பங்கேற்ப்பு ஆவணத்திற்க்கான" செபியின் அறிவிப்பால் விழுந்தது.

ஆகஸ்ட் 16,17 தேதிகளில் பங்குச் சந்தை வ்ழுந்ததுபோது சில பங்குகளில் முதலீடு செய்தேன். அதில் ஒரு பங்கைத்தவிர மற்ற பங்குகள் அனைத்தும் 50 சதவீதத்துக்கு அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளன. அந்த ஒரு பங்கு(ஏர்டெல்)கூட இப்போது அலைபேசி நிறுவனங்களுக்குள்ள பிரச்னையினால்தான் குறைந்தது.

Wednesday, November 7, 2007

07.11.2007 மதிப்புகூடும் ரூபாயால் ஏற்றுமதி தொழிலில் உள்ள தொழிலளர்கள் வேலை இழப்பு.....

சிஎன்பிசி டிவியில் சிதம்பரம் சொல்லிக்கொண்டிருந்தார் "ஏற்றுமதியாளர்கள் மதிப்புகூடும் ரூபாயுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும்" என்று.

மதிப்புகூடும் ரூபாயால் ஏற்றுமதி (ஆயத்த ஆடை போன்றவை) வியாபாரத்தில் உள்ள இலட்சக்கணக்காணவர்கள் வேலை இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லாவற்றுக்கும் வரி போடும் நம்ம நிதி அமைச்சர் சிதம்பரம் மூட்டை மூட்டையாய் டாலரை பங்கு வணிகத்தில் கொட்டும் அன்னிய முதலீட்டர்களிடம் இதற்க்கும் வரி விதிக்கலாம். ஆனல், அவர் வரி போட மாட்டார் . ஏனெனில் அப்புறம் முதலீடு நம் நாட்டிற்க்கு வராது.

பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து ஸ்டாம்ப் வரி(ரூ.100க்கு 16 பைசா என்று நினைவு) மூலமாக அரசுக்கு ஆயிரக்கணக்காண கோடி ரூபாய் கிடைகிறதாம்.அப்படியே மதிப்பு கூடும் ரூபாய்க்கும் ஒரு வரி போடலாம்.

Tuesday, November 6, 2007

06.11.2007 வாங்க, பங்கு வாங்கலாம் வாங்க!

இப்போது நகரத்தில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் சிற்றூர்களில் உள்ளவர்கள்கூட பங்கு வணிகம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் தினத்தந்தி,தினமலர்,நாணயம் விகடன் போன்ற பத்திரிக்கைகளின் உதவியால்.

என்னுடன் வேலை செய்பவர்களுடன்(கணிணித்துறை) பேசும்போது எல்லோருக்கும் பங்கு வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை உள்ளதென்பது தெரிகிறது. ஆனால்,நட்டமாகி விடுமோ என்ற பயத்தில் பெரும்பாலனோர் இதில் நேரடியாக ஈடுபடுவதில்லை. பரஸ்பர நிதி மூலமாக ஈடுபடுகிராற்கள்.

குறைந்த அளவுகூட ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பங்கு வணிகத்தில் நேரடியாக மட்டுமில்லாது மறைமுகமாகக்கூட(பரஸ்பர நிதி) ஈடுபடுவது கூடாது. அதாவது,"அய்யோ இன்னைக்கு ரூ.100 போச்சே" என்று நெஞ்சைப் பிடிப்பவர்கள், பணத்தை வங்கி சேமிப்பு நிதியில் போட்டுவிட்டு நிம்மதியாய் இருக்கணும்.

மங்களூர் சிவா தன் "மார்கெட் ஜோக்" பதிவில் சொன்ன மாதிரி, இனிமேல் பங்கு வணிகத்தில் ஈடுபட "பான்" அட்டையுடன் ஒருத்தர் அவருடைய ஈசிஜி, கார்டியாக் அறிக்கையயும் தாக்கல் செய்யச் சொல்லணும் =)

முதல் முதலாக பங்கு வணிகத்தில் ஈடுபட விரும்புபவகர்கள் தினமும் தினத்தந்தி, நாணயம் விகடன் படித்து பங்கு வர்த்தகத்தைத் தொடர்ந்து கவனித்து வந்து நம்பிக்கை வந்தபின் ஈடுபடலாம்.

பங்கு வணிகம் பற்றி தமிழில் வந்துள்ள நூல்களைப் படிக்கலாம்.
செல்லமுத்து குப்புசாமியின் "இழக்காதே"
சோம.வள்ளியப்பனின் "அள்ள அள்ளப் பணம்"

Thursday, November 1, 2007

01.11.2007 வருக! வருக! என் முதல் பதிவு

கடந்த ஒரு வருடமாக ப்ளாக் ஆரம்பிக்கனும் நினைச்சது "அம்மாவின்"(இறை)அருளால் இன்று நடந்துள்ளது. எதைப்பற்றியும் எழுதத்தெரியாததால் என்ன எழுத என்று தயக்கத்தில் பதிவெழுத இவ்வளவு நாளாயிற்று. எனக்கு கொஞ்சூண்டு தெரிந்த பங்கு வணிகத்தைப் பற்றி எழுதலாம் என்று நினைத்து ஆரம்பிச்சாச்சு.

Om sakthi ammave Saranam

ஓம் சக்தியே! பராசக்தியே!
ஓம் சக்தியே! ஆதி பராசக்தியே!
ஓம் சக்தியே! மருவூர் அரசியே!
ஓம் சக்தியே! ஓம் வினாயகா!
ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே!
ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமட்சியே!