Sunday, November 11, 2007

11.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.

பங்கு வாங்கணும்னு முடிவு பண்ணியாச்சு.

நான் நாணயம் விகடனில் "ரூ.2000-ல் பங்கு வாங்குவது எப்படி?" என்பதைப் பார்த்துத்தான் பங்கு வாங்க ஆரம்பித்தேன்.

டீமேட் எண் வாங்குவதற்க்கு ரூ.500மீதி 1500க்கு ரூ.10 விலையுள்ள 150 பங்குகள் வாங்கலாம். இது புதியதாக பங்கு சந்தையில் நுழைபவர்க்கு, பங்கு வாங்குவது எப்படி?" என்ற அறிமுகம் கொடுத்த அளவில் சரி.

ஐசிஐசிஐ,ஷேர்கான்,ரிலையன்ஸ் போன்றவைமூலம் டீமேட் கணக்கு தொடங்கலாம். அதற்க்கு பான் அட்டையும், வங்கிக்கணக்கும் அவசியம்.

என்ன பங்குகளை வாங்குவது?
தினத்தந்தி,நாணயம் விகடன் போன்றவற்றில் வரும் பங்கு பரிந்துறைகளை சிஃபி.காம், மணிகண்ட்ரோல் போன்ற பங்கு சம்பந்தமாக உள்ள தளங்களில் நமது பெயரில் ஒரு அக்கௌண்ட் திறந்து அதில் இந்த மாதிரி பங்குகளின் தகவல்களை-விலை,தேதி போட்டு வைத்துக்கொள்ளலாம் .

ஒரு 3 அல்லது 6 மாதங்கள் கவனித்து வந்தால் அதில் எந்த பங்கை வங்குவது என்பது புரியும்.

நான் ஷேர்கானில் புதிதாக டீமேட் கணக்கு தொடங்குவதற்க்காக மே 2006ல் அங்கு ஒருவரைச் சந்தித்தேன். எவ்வளவு குறைந்த அளவு பங்கு வாங்கினாலும் ரிலையன்ஸ் போன்ற அடிப்படையில் நன்றாக உள்ள பங்கை வாங்குமாறு சொன்னார்.அப்போது அப்பங்கின் விலை சுமார் 1000. இப்போது அதன் விலை ரூ.2734 =)


எப்போது வாங்குவது?
மார்க்கெட் ஒவ்வொரு 2 அல்லது 3 மாதத்துக்கு ஒரு முறை ஏதாவது காரணத்தினால் விழும். கடைசியாக அக்டோபர் 17ம் தேதியன்று "பங்கேற்ப்பு ஆவணத்திற்க்கான" செபியின் அறிவிப்பால் விழுந்தது.

ஆகஸ்ட் 16,17 தேதிகளில் பங்குச் சந்தை வ்ழுந்ததுபோது சில பங்குகளில் முதலீடு செய்தேன். அதில் ஒரு பங்கைத்தவிர மற்ற பங்குகள் அனைத்தும் 50 சதவீதத்துக்கு அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளன. அந்த ஒரு பங்கு(ஏர்டெல்)கூட இப்போது அலைபேசி நிறுவனங்களுக்குள்ள பிரச்னையினால்தான் குறைந்தது.

1 comment:

மங்களூர் சிவா said...

//
டீமேட் எண் வாங்குவதற்க்கு ரூ.500

//மீதி 1500க்கு ரூ.10 விலையுள்ள 1500 பங்குகள் வாங்கலாம்.
//
Eppidi??
1500 x 10 = ??

இது புதியதாக பங்கு சந்தையில் நுழைபவர்க்கு, பங்கு வாங்குவது எப்படி?" என்ற அறிமுகம் கொடுத்த அளவில் சரி.
//

just kidding dont serious