Wednesday, January 16, 2008

16.01.208 இன்றைய பங்குத் தகவல்

நேற்று சென்ஸ்செக்ஸ் 400 புள்ளிகளுக்குமேல் குறைந்தபோது நான் நினைத்தேன்.
1. இன்று காலையில் மிகவும் குறைந்து, வர்த்தகம் முடியும் நேரத்தில் கொஞ்சம் மேலேறும்.

2. அடுத்த 2,3 தினக்கள் ஒரளவு குறைந்து, ரிலையன்ஸ் பவர் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நாள் வரை கொஞ்சம் கூடியோ, குறைந்தோ சென்று பின் மேலேறும். ரிலையன்ஸ் பவர் ஐபிஓக்கு 200 மடங்குவரை முதலீடு செய்யபடுமாம். அதில் ஒதுக்கீடு கிடைக்காதவ ர்களின் பணம் 3,4 வாரம் கழித்து முதலீட்டாளர்க்குத் திரும்பத் தரப்படும். அது வரையில் பங்குச் சந்தை இப்படிப் போகலாம். அதன் பின் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த பணம், மறுபடியும் பங்குச் சந்தைக்கு வந்துதானே ஆகணும். அப்படி நடந்தால் அப்போது சென்ஸெக் மேலேறித்தான் ஆகணும்.

இன்று ரியல் எஸ்டேட் பங்குகள்(யுனிடெக்,ஓமேக்ஸ் போன்ற பங்குகள்) நல்ல அடி வாங்கின. எப்போதுமே ரியல் எஸ்டேட் பங்குகள் மேலே போகும்போதும் மிக வேகமாப் போகும்.கீழே இறங்கும்போது அதைவிடா வேகமாய் =) . அதனால், பங்குச்சந்தை சார்ந்த நிதியை நிர்வகிக்கும் மேலாளர்கள் ரியல் எஸ்டேட் பாங்குகளை வாங்குவதில் அவ்வளவு ஆரிவம் காட்டுவதில்லையாம்.

யுனிடெக்:
ஆகஸ்ட் 18,2007ல் ரூ.474க்கு வாங்கினேன்.
பின் ஆகஸ்ட் 31ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கிடைத்தது.
சில வாரங்களுக்குமுன் அதன் விலை ரூ.547 வரை சென்றது.
இன்றைக்கு அதன் விலை ரூ.487 லாபம் 5 மாதத்தில் 100 சதவீதத்துக்கும்மேல்.
இன்று கொஞ்சம் பங்கு வாங்கினேன்.

இன்ஃபோசிஸ் மாதிரி முதலீட்டாளர்க்கு அதிக அளவில் லாபப்பங்குகளை கொடுக்கும் பங்கு இது. இப்பங்கை ஐபிஓவில் ரூ.20க்கொ ரூ.30க்கோ வாங்கியவர் இப்போது அதன் ஒரு பங்கு 115 பங்காக மாறியுள்ளது என்று மெசேஜ்போர்டில் சொல்றார், அந்த அளவுக்கு லாபப்பங்குகளை அள்ளி அள்ளி கொடுக்கும் பங்கு இதுன்னு.

யுனிடெக்குக்கும் 16 வட்டங்களில் செல்பேசி லைசென்ஸ் கிடைத்துள்ளது. மேலும், இது சில்லறை விற்ப்பனைத்துறையில் கால் பதிக்க இருக்கிறது. இது ஏற்க்கனவே ரியல் எஸ்ட்டேட் நிறுவனமாக இருப்பதால் கடை போட அடுத்தவரிடம் கையேந்த வேன்டியதில்லை. அதனால்,நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய மிக நல்ல பங்கு இது.

5 comments:

மங்களூர் சிவா said...

அப்புறம் ரிலையன்ஸ் ஐபிஒ போட்டிங்களா?

கிருத்திகா ஸ்ரீதர் said...

Siva, would like to enter into stock market, been watching the market for quite sometime, is it a good time to buy some small quantity of stock and would yu recommend for a beginner..(suddenly my tamil keyman is not working.. thats the reason fr this question in english..)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

மங்களூர் சிவா,வாங்க.
ரிலையன்ஸ் ஐபிஓ-க்கு போடலை.நீங்க?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

கிருத்திகா,வாங்க.
பங்குசந்தையை ஒட்டு மொத்தமா கவனிக்கிற மாதிரியே, தனிப்பட்ட பங்குகளையும் கவனிங்க.
நீங்க எதிர்பார்த்த விலைல பங்கு கிடைச்சா வாங்குங்க.
இப்ப 2 நாளா பங்குச்சந்தை விழுத்துட்டு இருக்கு. அதனால,பங்கு குறைந்த விலைக்குக் கிடைக்கும்.

<==
is it a good time to buy ==>

நீண்ட கால முதலீட்டாளர் எந்த நாளிலும் பங்கு வாங்கலாம்.

என்னுடைய வலைத்தளத்தில் மற்ற பதிவர்களின் உரல்(URL) கொடுக்கப்பட்டுள்ளது.அதில் பங்குகளோட பரிந்துரை கிடைக்கும்.

பங்கில் முதலீடு பண்ணி லாபம் அள்ள வாழ்த்துக்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி.. நான் ரிலையன்ஸ் ஐபிஓ போட்டிருக்கேன்.. அது முடிவு தெரிஞ்சு மத்தது வாங்கலாம் என்று இருந்தேன்.. ஆனால் நீங்கள் சொல்லும் லாஜிக் சரியா இருக்கு எல்லோரும் அந்த பணத்தை மாற்ரு பங்குக்குத்தான் திருப்ப நினைப்பார்கள்.. எனவே சிறு பங்குகள் வாங்க இப்பவே முயற்சிக்கிறேன்.. நன்றி..வாழ்த்துக்களுடன்...