Friday, April 11, 2008

11.04.2008 இன்றைய பங்குத்தகவல்

பங்குச்சந்தை அப்பப்ப 100/200 புள்ளிகள் அதிகரிக்கறதும், பின் அதே அளவு குறையறதுமா இருக்கு.
கேர்ன் எனர்ஜி

சென்ற வருடம் ஐபிஓ-வில் ரூ.160க்கு வாங்கினேன். பின் ரூ.145க்கு சராசரியாக்கினேன். இவ்வருடம் ரூ.200க்கு சில காரணங்களால் பிப்ரவரியில் விற்றேன். மறுபடியும் அதே விலைக்கு வராதா என காத்திருந்தேன்.சென்ற மாதம் 24ஆம் தேதி ரூ.195க்கு கிடைத்தது.இப்போது அதன் விலை ரூ.250

பி ஹைச் யி எல்(BHEL)
சென்ற வாரம் 3 நாட்களில் சுமார் ரூ.400 குறைந்தாது.என் நண்பர்கள் சிலர் ரூ.1700க்கு வாங்கினார்கள். எனக்கு ரூ.1870க்கு கிடைத்தது(அவரசக்குடுக்கை !!!). இப்போது அதன் விலை ரூ.1829

சந்தையில் குறிப்பிட்ட பங்கு 2,3 நாள் குறைந்து வரும்வரை பொறுத்திருந்து வாங்கினால் லாபம் கிடைக்கும். அடிப்படையில் வலுவான பங்காக இருக்கும்பட்சத்தில், இப்போது விலை கூடாவிட்டாலும் பின்னால் கூடும் என்று எதிர்பார்க்க வேண்டியதுதான்.

2 comments:

மங்களூர் சிவா said...

அண்ணே பதிவு போட்டு 2 மாசம் ஆகப்போகுது புது பதிவு போடுங்க!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நீங்கதான அது? அடப்பாவி இப்படியா தவிக்க விடுறது? நேற்று என்னோட ப்ளாக்கில் யாரோ கிறுக்கியிருக்காங்க. கட்டம் கட்டமா தெரிந்தது. பப்ளிஷ் பண்ணியும் பார்த்துட்டேன். ஊஹூம். பிரயோசனமில்லை. யாரோ, வேற்று மொழிக்காரன் சும்மா விளம்பரத்துக்காகத்தான் ஏதோ கமெண்ட் எழுதியிருக்கான்னு நினைச்சேன்.

சரி மேட்டருக்கு வர்ரேன்.

இன்னைக்கு சுமார் 450 புள்ளிகள் அடி. சென்செக்ஸ் 14000க்கு போகுமாம்.இன்னும் பங்கு பதிவு வேணுமா உங்களூக்கு?