வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க(அந்த அப்பாவி யாருன்னு பின்னூட்டத்தில தெரிஞ்சுக்குங்கோ) அப்பப்போ ஏதாவது கிறுக்கலாம்னு இருக்கேன்.
நேத்து சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்குமேல குறைஞ்சதால இன்னைக்கு அது கொஞ்சம் மேலேறும்னு நினைச்சேன்.(நீ என்னைக்கு நினைச்சு அது சரியா வந்துருக்கு?)
சென்செக்ஸ் 14000 வரை கீழே போகுமாம்.(அப்புறம் 12000 வரை போகும்,அப்புறம் 10000, அப்புறம் 8000. எப்போ பூஜ்யம் வரும்?)
ரியல் எஸ்டேட் பங்குகளேல்லாம் வெளியீட்டு விலைக்கு கீழே இருக்குது. அதனால, அந்த பங்கையெல்லாம் இப்போதிருந்தே வாங்கி சேர்க்க ஆரம்பிக்கலாமாம்(அதுதான் கையிருப்பில் உள்ள எல்லா பணத்துக்கும் வாங்கி முடிச்சாச்சே. அப்புறம் எங்கே வாங்கறது?)
இன்னும் 2 வாரத்துல மழைக்காலம் ஆரம்பிக்குமாம்(இப்படித்தான் 10 நாளா சொல்லிட்டு இருக்காங்க). அப்போது சென்செக்ஸ் மேலே எற ஆரம்பிக்குமாம்.
கச்சா என்ணெய் ஒரு பீப்பாய் 137 டாலருக்கு மேல பறக்கிறதால என்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு வரும்போது வாங்கலாம்னு இருக்கேன்.
10 comments:
மீ தி பர்ஸ்ட்டு
அந்த அப்பாவி நாந்தான்பா!!!!
சென்செக்ஸ் 12000ம் க்கு போகும்னு CNBC TV18 ல டை கட்டிண கோயிஞ்சாமி ஒருத்தர் சொன்னதா என் நண்பர் சொன்னார்
அந்த கன்றாவி சேனல் சன் டிடிஎச்ல வர்றதில்ல அதனால நான் பாக்கலை :(
சென்செக்ஸ் ஜீரோ வர்ற அன்னைக்கு நான் ட்ரேடிங் பண்றத நிறுத்திக்கிறேன்பா சீக்கிரம் கொண்டுவாங்க
:)))
hi,
congrats.
அண்ணே
டெக்னிகல் ஆளுக்கு எழுத வராது. எழுதுர ஆட்கள் டெக்னிகலா வீக்கா இருப்பாங்க. உங்களுக்கு ரெண்டும் வருது..அப்பப்போ இல்லாம continueவா gap விடாம தொடர்ந்து எழுதுங்கண்ணே!
(இந்த உண்மையை சொன்னதுக்காக என்னையை அப்பாவின்னு சொன்னாலும் சரி)
Siva Sir Plz try to update regularly its really useful for us thx
Siva Sir Plz try to update regularly its really useful for us thx
வாங்க மங்களூர் சிவா, அலெக்ஸாண்டர்,புதுகை எம்.ஜே.அப்துல்லா,bat1 இன்னைக்குத்தான் கமெண்ட் பகுதிய பார்த்தேன். சாதாரணமா என்னோட ஜிமெயில்ல இந்த கமெண்டுகள் வந்திருக்கணும். அது சதி பண்ணிருச்சி.
<==
மங்களூர் சிவா said
சென்செக்ஸ் ஜீரோ வர்ற அன்னைக்கு நான் ட்ரேடிங் பண்றத நிறுத்திக்கிறேன்பா சீக்கிரம் கொண்டுவாங்க
:)))
==>
மங்களூர் சிவா,
அது ஜீரோ வர்ரது இருக்கட்டும். உங்க போர்ட்போலியோவுல இப்ப பணம்(பங்கு மதிப்பு) இருக்கா?
அதுல ஜீரோ வந்தாத்தான் பிரச்னை. அது வரைக்கும் நீங்க பங்கில ஆடலாம் =)))
அலெக்ஸாண்டர் நன்றி.
புதுகை எம்.எம்.அப்துல்லா,
இப்படியெல்லாம் சொல்லி நீங்க நக்கல் அடிக்கலாம். தப்பில்ல. அதெல்லாம் panguvaniham.wordpress.com படிங்க. புரியும்.
bat1 , நன்றி.
Post a Comment