பங்கு சந்தையைப் பாதிக்கக்கூடிய உள்நாட்டுக்காரணிகள் பெரியதாய் எதுவும் இல்லை. பணவீக்கமும் 12 சதவீதத்துக்கு அருகில்தான் இருக்கு. முந்தாநாள் நடந்த மத்திய ரிசர்வ் வங்கி வட்டிவீதம் உயர்வு, சி.ஆர்.ஆர் உயர்வு போன்றவை கடந்த 2 மாதமாவே எதிர்பார்த்ததுதான். அதற்க்குச் சந்தை இப்படி பெரிய எதிர்வினை(சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைவு) செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. வியாபாரிகள் "ஷார்ட் செல்" பண்ணியிருக்காங்க போல. நேத்து அதற்க்கு "கவர்" செய்ததால் சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்ந்ததாம்.
இப்போது உள்ள சூழ்நிலையில் ஏற்கனவே வாங்கியிருந்த பங்குகளை குறைந்த விலையில் நஷ்டத்துக்காக என்றாலும் விற்றுவிட்டு வெளியே வருவதுதான் புத்திசாலித்தனம்போல இருக்கு.
ஏதாவது நல்ல பங்கு திடீரெனென்று மிகக் குறைந்த விலைக்குக் கிடைத்தால் வாங்கி சில நாட்கள் வைத்திருந்து பார்கலாம். நேற்று முந்தினம் சன் டிவி சுமார் 15 சதவீதம் குறைந்து ரூ.330 என்ற அளவில் கிடைத்தது.
கேர்ன் போன்ற பெட்ரோலியப் பங்குகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும்போது வாங்கி வைக்கலாம்.