Monday, December 24, 2007

24.12.2007 இன்றைய தகவல்

கடந்த வெள்ளியன்று அமெரிக்க பங்குச் சந்தை நன்றாக முடிந்திருப்பகால்,அதன் தாக்கத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தையும் 200 - 400 புள்ளிகள் உயரும் என்று எதிர்பார்த்ததுதான். ஆனால்,இவ்வளவு புள்ளிகள்(691) உயரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மென்பொருள் பங்குகள் (சத்யம்,விப்ரொ,டிசிஎஸ்,இண்ஃபோசிஸ்) நிறைய உயர்ந்ததால்தான் சென்செக்ஸ் இவ்வளவு புள்ளிகள் கூடியது போலும்.இன்ஃபோசிஸ் 4வது காலாண்டு அறிக்கை தாக்கல் செய்யும்வரை இந்த உயர்வு தொடரலாம்.

மேற்கத்திய நாட்டவர்க்கு இந்த மாதம்தான் ஆண்டுக்கணக்கு முடியும் மாதம். அதனால்,லாபத்தை உறுதி செய்வதற்க்காக அவர்கள் பங்குகளை விற்ப்பார்கள் என்ற விற்ப்பன்னர்கள் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு சரி என்பது போகப்போகத்தான் தெரியும்.

டாட்டா மோட்டார்ஸ்
டாட்டா மோட்டர்ஸ் ஃபோர்டின் "ஜாகுவர் - லேண்ட்ரோவர்" கையப்படுத்துதலை அடுத்து, அதற்க்கு டாட்டா மோட்டர்ஸ் கொடுக்கும் விலை 200 கோடி டாலர்கள் மிக மிக அதிகம் என்று "செய்திகள்"(வதந்தி) வருகின்றன். அதனால் வரும் நாட்களில் டாட்டா மோட்டர்ஸின் பங்கின் விலை குறையக்கூடும். இப்படித்தான்,டாட்டா ஸ்டீல் கோரஸை கையகப்படுத்தும்போதும் நடந்தது. நானும் இன்னும் கொஞசம் இந்தப் பங்குகளை வாங்கலாம் என்று இருக்கிறேன். மேலும்,எல்லாக் கார் நிறுவங்களும் உன்னிப்பாய் கவனிக்கும் டாட்டாவின் ரூ.1 லட்சம் கார், ஜனவரி 10ஆம் தேதிய இந்திய ஆட்டோமொபையில் கண்காட்சியில் காண்பிக்கப்படும் என்று தெரிகிறது.

2 comments:

RK said...

டாட்டா மோட்டார்ஸில் கண்டிப்பாக கொஞ்சம் போட்டு வைக்கலாம்(இரண்டு/மூன்று ஆண்டுகள் முதலீட்டுக்காலம்)..ஒரு லட்ச ரூபாய் கார் ஆரம்பத்தில் கொஞ்சம் சல சலத்தாலும், நல்ல விற்பனையை ஒராண்டில் எட்டும் என்பது என் கணிப்பு

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க,ராதாகிருஷ்ணன்,
ஆம்.ரூ.1 லட்சம் கார்,நிறைய விற்க்கலாம்.அதனுடைய வெற்றி,டாட்டா மோட்டர்ஸுகு நல்ல ஏற்றுமதி வருவாயையும் ஈட்டலாம்.
மத்திய அரசு, பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, புது வரி போடப்போறாங்களாம்.அப்போது,கார் விற்ப்பனை எப்படி இருக்கும்னு தெரியாது.இப்போதே பெரு நகரங்களில் நெரிசல் பயங்கராமாய் இருக்கு.