Friday, January 25, 2008

25.01.2008 இன்றைய பங்குத் தகவல்

பங்குச்சந்தை தான் வாங்கிய "மரண அடி"யிலிருந்து கொஞ்ச கொஞ்சமா மேலெழுந்து வர்ர மாதிரி தெரியுது.


கடந்த 2 வாரங்களா நிறுவங்களின் காலாண்டு அறிக்கை வெளி வந்துகிட்டு இருக்கு. கிட்டத்தட்ட எல்லா நிறுவங்களும் நல்ல லாபம் காமிச்சு இருக்காங்க. கடந்த 4 காலாண்டுகளா குறைவான வளர்ச்சியா(deceleration) இருந்தது, இப்ப அதிக வளர்ச்சிய(acceleration) நோக்கி போய்ட்டிருக்காம்.அதனால, "இந்தியா வளர்ச்சி கதை" (India Growth story)இன்னும் நீர்த்துபோகாம இருக்குன்னு நம்பலாம்.

அதனால, இப்ப வாங்கின பங்குச் சந்தை "மரண அடி" சில வாரங்களில்/மாதங்களில் சரியாய்விடும்னு நம்பலாம்.

என்னுடன் வேலை பார்ப்பவர் கடந்த 6 மாதங்களாக முதலீடு செய்யாமல் பணத்தை கையில் வைத்திருப்பதாகவும், எப்போது பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று தெரியவில்லை என்றும் சொன்னர்.அவரும் நானும் பங்குச்சந்தையைப் பற்றி பேசுவோம்.மென்பொருளாளர்கள் வேறு எதைப்பற்றி பேசுவோம்! அவருக்கு நிறைய விடயங்கள் பங்குத்தரகர்,நண்பர் மூலமாக தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.ஆனால், அவர், தான் யூகித்த ஒரு விடயம்கூட சரியாக நடக்கவில்லை என்று வருத்தப்பட்டார். பேச்சின் முடிவில் அவர் என்னிடம் கேட்கும் கேள்வி "இனிமேல் சென்செக்ஸ் உயருமா/விழுமா? இபோது எந்த பங்கை வாங்குவது?". என்னமோ எனக்குத்தான் பங்குச்சந்தையின் நுணுக்கம் தெரிந்ததுபோல. அவர் சொன்ன தகவல். ரிலையன்ஸ் பவர் ஐபிவோ(IPO)வில் பங்கு கிடைக்காதவர்களுக்கு திரும்பி வரவேண்டிய பணம், வரும் செவ்வாயன்று திரும்பி வருமாம். அப்பணம் திரும்பவும் பங்குச்சந்தைக்குத்தான் வரும் என்று யூகிக்கலாம்.

Tuesday, January 22, 2008

22.01.2008 இன்றைய பங்குத் தகவல்

பங்குச்சந்தைல சுலபத்துல எழுந்திருக்க முடியாத ஒரே மரண அடிதான்.
இந்த அழகுல பதிவு தேவையா? இருந்தாலும் கடமைன்னு ஒண்ணு இருக்குல்ல =)


டிசம்பர் மாதத்துல இருந்தே பங்குச்சந்தை விழுமெனெ செய்திளில் எல்லோரும் சொல்லிட்டுருந்தாங்க. ஆனா,இப்படி விழும்னு யாருமே எதிர்பார்க்கபோல.

எக்கனாமிக் டைம்ஸில் போட்ருந்தது. மும்பாயில் செல்போன் இணைப்புகள் சரியா வேலை செய்யலையாம், எல்லாருமே உபயோகப்படுத்த முயன்ரதால. மும்பையில் வெள்ளம் வந்தபோது கூட இப்படி இருந்ததில்லையாம். ஆம்புலன்ஸ் வண்டிகளூக்கு தட்டுப்பாடாம். பங்குத் தரகர் அலுவலகத்தில் நெஞ்சு வலி வந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப. கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவிலும் டாக்டர்கள் பணியிலிருந்தார்களாம்.

ஆனா, எல்லாரும் இந்த பங்குச் சந்தை மரண அடினால பயப்படலியாம்.நம்ம மாதிரி (=)) ஒருத்தர் தான் இதப்பத்திக் கவலைப்படலைன்னும், மருத்துவ உபகரணங்களுக்கு(எல்லாரும் பங்குச்சந்தை இழப்புனால மருத்துவமனைல சேர்க்கப்படுறதனால) நல்ல கிராக்கி இருக்றதனால, அது சம்பந்தமான் பங்குகளை வாங்கிக்குவிக்கப்போறாராம். இத அவர் நேற்று சொல்லி யிருக்கார். இன்னைக்கு அந்த ஆள் என்ன ஆனார்னு நாளைக்கு பார்க்கணும் =)).

ரிலையன்ஸ் கேபிடல்:
என்னுடன் வேலை பார்ப்பவர் ரிலையன்ஸ் கேபிடல் பங்கை காலையில் ரூ.1500க்கு வாங்கினார்.இப்பொது அதன் விலை சுமார் ரூ.1800

Friday, January 18, 2008

18.01.2008 இன்றைய பங்குத் தகவல்

கடந்த 4 நாட்களாக விழுந்துகொண்டிருந்த பங்குச்சந்தை இன்று ஒரேயடியாய் குப்புற விழுந்து விட்டது. கடந்த 2 மாதங்களாக தறிகெட்டு ஓடிய சந்தை, இப்போது 2 மாதத்துக்கு முன்புள்ள நிலைக்கு வந்துள்ளது என்று தோன்றுகிறது. இந்த காலாண்டில் நல்ல லாபமீட்டியிருந்தும், ரிலையன்ஸ்கூட இந்த அலையில் தப்பவில்லை. உடன் வேலை பார்த்தவர் சொன்னது - போனஸ் பங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களாம்.
ரிலையன்ஸ் கேபிடல்:
20 - 11 - 2007 விலை ரூ.2285
18 - 01 - 2008 விலை ரூ.2300
வரும் வாரத்தில் சந்தை தன்னை நிலை நிறுத்திக்கொள்ளுமா, இல்லை இன்னும்விழுமா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதுவரை, இந்த மாதிரி சந்தை விழுந்தால் ஒரு வாரத்தில் திரும்ப எழுந்துள்ளது.

Wednesday, January 16, 2008

16.01.208 இன்றைய பங்குத் தகவல்

நேற்று சென்ஸ்செக்ஸ் 400 புள்ளிகளுக்குமேல் குறைந்தபோது நான் நினைத்தேன்.
1. இன்று காலையில் மிகவும் குறைந்து, வர்த்தகம் முடியும் நேரத்தில் கொஞ்சம் மேலேறும்.

2. அடுத்த 2,3 தினக்கள் ஒரளவு குறைந்து, ரிலையன்ஸ் பவர் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நாள் வரை கொஞ்சம் கூடியோ, குறைந்தோ சென்று பின் மேலேறும். ரிலையன்ஸ் பவர் ஐபிஓக்கு 200 மடங்குவரை முதலீடு செய்யபடுமாம். அதில் ஒதுக்கீடு கிடைக்காதவ ர்களின் பணம் 3,4 வாரம் கழித்து முதலீட்டாளர்க்குத் திரும்பத் தரப்படும். அது வரையில் பங்குச் சந்தை இப்படிப் போகலாம். அதன் பின் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த பணம், மறுபடியும் பங்குச் சந்தைக்கு வந்துதானே ஆகணும். அப்படி நடந்தால் அப்போது சென்ஸெக் மேலேறித்தான் ஆகணும்.

இன்று ரியல் எஸ்டேட் பங்குகள்(யுனிடெக்,ஓமேக்ஸ் போன்ற பங்குகள்) நல்ல அடி வாங்கின. எப்போதுமே ரியல் எஸ்டேட் பங்குகள் மேலே போகும்போதும் மிக வேகமாப் போகும்.கீழே இறங்கும்போது அதைவிடா வேகமாய் =) . அதனால், பங்குச்சந்தை சார்ந்த நிதியை நிர்வகிக்கும் மேலாளர்கள் ரியல் எஸ்டேட் பாங்குகளை வாங்குவதில் அவ்வளவு ஆரிவம் காட்டுவதில்லையாம்.

யுனிடெக்:
ஆகஸ்ட் 18,2007ல் ரூ.474க்கு வாங்கினேன்.
பின் ஆகஸ்ட் 31ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கிடைத்தது.
சில வாரங்களுக்குமுன் அதன் விலை ரூ.547 வரை சென்றது.
இன்றைக்கு அதன் விலை ரூ.487 லாபம் 5 மாதத்தில் 100 சதவீதத்துக்கும்மேல்.
இன்று கொஞ்சம் பங்கு வாங்கினேன்.

இன்ஃபோசிஸ் மாதிரி முதலீட்டாளர்க்கு அதிக அளவில் லாபப்பங்குகளை கொடுக்கும் பங்கு இது. இப்பங்கை ஐபிஓவில் ரூ.20க்கொ ரூ.30க்கோ வாங்கியவர் இப்போது அதன் ஒரு பங்கு 115 பங்காக மாறியுள்ளது என்று மெசேஜ்போர்டில் சொல்றார், அந்த அளவுக்கு லாபப்பங்குகளை அள்ளி அள்ளி கொடுக்கும் பங்கு இதுன்னு.

யுனிடெக்குக்கும் 16 வட்டங்களில் செல்பேசி லைசென்ஸ் கிடைத்துள்ளது. மேலும், இது சில்லறை விற்ப்பனைத்துறையில் கால் பதிக்க இருக்கிறது. இது ஏற்க்கனவே ரியல் எஸ்ட்டேட் நிறுவனமாக இருப்பதால் கடை போட அடுத்தவரிடம் கையேந்த வேன்டியதில்லை. அதனால்,நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய மிக நல்ல பங்கு இது.

Monday, January 14, 2008

14.01.2008 இன்றைய பங்குத் தகவல்

ரிலையன்ஸ் பவர் பங்குச்சந்தையில் லிஸ்டிங்க ஆற வரைக்கும் சந்தை இப்படித்தான் கொஞ்சம் மேலே/கீழே போய்ட்ருக்குமாம்.

ரிலையன்ஸ் பவர் பங்குக்குள்ள வரவேற்ப்பைப் பார்த்தால், லிஸ்டிங் ஆகிற தினத்தில்,எல்லோரும் விற்க முயலும்போது, யார்தான் வாங்குவார்களோ தெரியவில்லை.

Wednesday, January 9, 2008

09.01.2008 இன்றைய பங்குத் தகவல்

ஸ்பைஸ் ஜெட்
டாட்டாவோ,அம்பானி குழுமமோ இந்த நிறுவனத்தில் அதிக அளவு பங்குகள் வாங்கப்போகிறார்கள் என்ற வதந்தியால் இந்தப்பங்குகள் நேற்று கோடிக்கணக்கில் வர்த்தகமாயின.

09.01.2008 இன்றைய தகவல்

நேற்று சென்செக்ஸ் 21000 தாண்டிவிட்டுச் சென்றது.இதுநாள்வரை,வெளிநாட்டு முதலீடுகளால்தான் சென்செக்ஸ் புள்ளி அதிகரிக்கும். ஆனால், இந்த முறை அதிகரிப்பு,இந்திய முதலீட்டாளர்களாலேயே நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த 2 மாதங்களாக உயரே ஏறிய ஸ்மால்,மிட்கேப் பங்குகள் நேற்றிலிருந்து குறைய ஆரம்பித்துள்ளன. 127 பங்குகள் 'பி' குழுவிலிருந்து "டி" குழுவிற்க்கு "செபி"யால் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நிறைய பங்குகளின் Circuit Filter 20%-லிருந்து 5ஆகக் குறைந்துள்ளது.

வரப்போகும் ரிலையன்ஸ் பவர்,ஃபியூச்சர் ஆகியவைகளின் ஐபிஒ-க்காக எல்லோரும்நேற்று பங்குகளை விற்றிருக்கிறார்களாம். அதனால்தான்,நேற்று பெரும்பாலான பங்குகள் விலை குறைந்ததாம்.

ஜெயப்பிரகாஷ் ஹைட்ரோ:
எனக்கு ஐபிவோ-வில் ரூ.32க்கு மார்ச் 2005-ல் கிடைத்தது. விலை ரூ.25க்கும் கீழே போனது. சலித்துப்போய் ரூ.30கு விற்றுவிட்டேன். நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன் ரூ.70க்கு வாங்கினார். நானும் ரூ.97க்கு வாங்கினேன். அதனுடைய இன்றைய விலை ரூ.136 .

Thursday, January 3, 2008

03.01.2008 இன்றைய தகவல்

கிறிஸ்த்துமஸ் விடுப்பில் போன வெளிநாட்டவர் (பணத்துடன்) திரும்ப வருவார்களாம்.அதனால்,சந்தை உயரும் என்று கணிக்கிறார்கள்.

டாட்டா மோட்டர்ஸ்
டாட்டா மோட்டர்ஸ் நேற்று 793ல் முடிவடைந்தது.ரூ.1 லட்சம் காருக்கான எதிர்பார்ப்பால் வரும் வாரங்களில் இது கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

கேர்ன் எனர்ஜி:
எனக்கு ஜனவரி 2007-ல் ஐபிஓ-வில் ரூ.160-க்குக் கிடைத்தது. பின் ரூ.111வரை கீழே சென்றது. ரூ.145-க்கு "சராசரி" (Average) ஆக்கினேன். இதன் நேற்றைய விலை ரூ.243