Friday, January 18, 2008

18.01.2008 இன்றைய பங்குத் தகவல்

கடந்த 4 நாட்களாக விழுந்துகொண்டிருந்த பங்குச்சந்தை இன்று ஒரேயடியாய் குப்புற விழுந்து விட்டது. கடந்த 2 மாதங்களாக தறிகெட்டு ஓடிய சந்தை, இப்போது 2 மாதத்துக்கு முன்புள்ள நிலைக்கு வந்துள்ளது என்று தோன்றுகிறது. இந்த காலாண்டில் நல்ல லாபமீட்டியிருந்தும், ரிலையன்ஸ்கூட இந்த அலையில் தப்பவில்லை. உடன் வேலை பார்த்தவர் சொன்னது - போனஸ் பங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களாம்.
ரிலையன்ஸ் கேபிடல்:
20 - 11 - 2007 விலை ரூ.2285
18 - 01 - 2008 விலை ரூ.2300
வரும் வாரத்தில் சந்தை தன்னை நிலை நிறுத்திக்கொள்ளுமா, இல்லை இன்னும்விழுமா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதுவரை, இந்த மாதிரி சந்தை விழுந்தால் ஒரு வாரத்தில் திரும்ப எழுந்துள்ளது.

6 comments:

Yogi said...

இந்த சமயத்தில் மியூட்சுவல் பண்டு மற்றும் பங்குகள் வாங்குவது லாபம் தருமா?

தென்றல் said...

சிவா,

அமெரிக்கா சந்தையை வைத்து ஓரளவு எதிர்பார்த்ததுதான்.. ஆனால்

காலையில் 200 புள்ளிகள் சரிவாய் இருந்தது. மதியம் 12 மணி அளவில் 'நம்பிக்கையூட்ட'கூடியதாக இருந்தது... சரி.. இன்னைக்கு வர்த்தகம் பண்ண வேண்டாம் என்று சென்று விட்டேன்... இறுதியில் செய்தியைப் பார்த்தால் ........ஷ்...ஷ்.. 600 புள்ளிகளுக்கும் கீழே..!

'உள்ளே' நுழைய நல்ல வாய்ப்பு..ம்ம்ம் ;(

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க தென்றல்,
<== 'உள்ளே' நுழைய நல்ல வாய்ப்பு..ம்ம்ம் ;( ==>
ஆமா.எல்லா பணத்தையும் ஏற்க்கனவே உள்ளே போட்டாச்சு.
அப்படியிருந்தும் லேசா உள்ளே நுழைஞ்சாச்சு.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க பொன்வண்டு,
மேலே,தென்றலோட கமெண்ட்ல உங்க கேள்விக்கு பதில் இருக்கு.

சுரேகா.. said...

ம்ம்ம்..இப்ப என்ன பண்றது???

பேசாம காத்திருக்கவேண்டியதுதானோ..?

நல்லா பண்ணிக்கிட்டிருக்கீங்க சாமான்யன்..!

உண்மையில் அசாமான்யன்..!

வாழ்த்துக்கள்!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க சுதாகர்,
வேற வழி? காத்துகிட்டுத்தான் இருந்தாகணும். இன்னும் 1,2 வாரங்களுக்குச் சந்தை இப்படித்தான் போவுமாம்.
<== உண்மையில் அசாமான்யன் ==>
அப்புறம் நான் அழுதுடுவேன்.அவ்வ்வ்வ்வ்வ்.....
[ இந்த மங்களூர் சிவா பதிவு/பின்னூட்டத்தோட பாதிப்பு ]

ஒரு யோசனை. : நாம பதிவர்கள்/வாசகர்கள் ஒவ்வொருத்தரும் 1 செக்டார் மற்றும் 3,5 பங்குகளையாவது தொடர்ந்து கவனித்து வந்தால் தகவல்களை பரிமாரிக்கொள்வதற்க்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கிரேன்.