Tuesday, January 22, 2008

22.01.2008 இன்றைய பங்குத் தகவல்

பங்குச்சந்தைல சுலபத்துல எழுந்திருக்க முடியாத ஒரே மரண அடிதான்.
இந்த அழகுல பதிவு தேவையா? இருந்தாலும் கடமைன்னு ஒண்ணு இருக்குல்ல =)


டிசம்பர் மாதத்துல இருந்தே பங்குச்சந்தை விழுமெனெ செய்திளில் எல்லோரும் சொல்லிட்டுருந்தாங்க. ஆனா,இப்படி விழும்னு யாருமே எதிர்பார்க்கபோல.

எக்கனாமிக் டைம்ஸில் போட்ருந்தது. மும்பாயில் செல்போன் இணைப்புகள் சரியா வேலை செய்யலையாம், எல்லாருமே உபயோகப்படுத்த முயன்ரதால. மும்பையில் வெள்ளம் வந்தபோது கூட இப்படி இருந்ததில்லையாம். ஆம்புலன்ஸ் வண்டிகளூக்கு தட்டுப்பாடாம். பங்குத் தரகர் அலுவலகத்தில் நெஞ்சு வலி வந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப. கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவிலும் டாக்டர்கள் பணியிலிருந்தார்களாம்.

ஆனா, எல்லாரும் இந்த பங்குச் சந்தை மரண அடினால பயப்படலியாம்.நம்ம மாதிரி (=)) ஒருத்தர் தான் இதப்பத்திக் கவலைப்படலைன்னும், மருத்துவ உபகரணங்களுக்கு(எல்லாரும் பங்குச்சந்தை இழப்புனால மருத்துவமனைல சேர்க்கப்படுறதனால) நல்ல கிராக்கி இருக்றதனால, அது சம்பந்தமான் பங்குகளை வாங்கிக்குவிக்கப்போறாராம். இத அவர் நேற்று சொல்லி யிருக்கார். இன்னைக்கு அந்த ஆள் என்ன ஆனார்னு நாளைக்கு பார்க்கணும் =)).

ரிலையன்ஸ் கேபிடல்:
என்னுடன் வேலை பார்ப்பவர் ரிலையன்ஸ் கேபிடல் பங்கை காலையில் ரூ.1500க்கு வாங்கினார்.இப்பொது அதன் விலை சுமார் ரூ.1800

7 comments:

ILA (a) இளா said...

சோகத்திலும் இப்படி ஒரு நக்கல் பதிவா? வாழ்க உங்க நெஞ்சுரம்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க இளா,
சீரியஸ் பதிவு போட்டு வாசகர்களை கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் =)

மங்களூர் சிவா said...

விட்ட காசுக்கு ஒரு டாடா நானோ வாங்கியிருக்கலாம்.

இருந்தாலும் பிடிச்சிருவோம்ல அந்த நம்பிக்கைய விடலை.

தென்றல் said...

//எக்கனாமிக் டைம்ஸில் போட்ருந்தது. மும்பாயில் செல்போன் இணைப்புகள் சரியா வேலை செய்யலையாம், எல்லாருமே உபயோகப்படுத்த முயன்ரதால. மும்பையில் வெள்ளம் வந்தபோது கூட இப்படி இருந்ததில்லையாம். ஆம்புலன்ஸ் வண்டிகளூக்கு தட்டுப்பாடாம். பங்குத் தரகர் அலுவலகத்தில் நெஞ்சு வலி வந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப. கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவிலும் டாக்டர்கள் பணியிலிருந்தார்களாம்.
//

சிவா, உண்மையிலேயுமா...? ;)

/விட்ட காசுக்கு ஒரு டாடா நானோ வாங்கியிருக்கலாம்.
/
ம.சிவா,
அப்படினா நான் 3,4ல வாங்கிருக்கணும் ;(

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க தென்றல்,
அப்படித்தான் அதில் போட்ருந்தது.
இன்னைக்கு பங்குச் சந்தை ஏறிட்டது.
அடுத்த இலக்கு 25000னு சொல்ராங்க.டாடா நானோ என்ன, பென்ஸ்,BMW வாங்கலாம்.

Anonymous said...

Hi All,

I could see many are feeling so bad for loosing money.But this is what we pay for our greed.Most of us definitely were knowing all stocks are overpriced and we are paying extra for the stocks.

adhigama panam kuduthu vangittu ippo pochey nu feel panni enna panna.

Now we are just gambling. So we should not feel for our loses.Lets Ensoy the party :)

Indha kodumailayum enna oru varuthamna namma panatha edho oru vellakaranum yaro oru ambaniyum eduthuttu poittangaley...

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க பிரசன்னா,ரொம்ப நாள் கழித்து எட்டிப்பார்க்கிறீங்க(ப்ளாக்குக்கு) விடுமுறைல இருந்தீங்க போல.
<==
adhigama panam kuduthu vangittu ippo pochey nu feel panni enna panna.
==>
ஆமாங்க.அடக்க முடியாத ஆசைல எக்கச்சக்க பணம் கொடுத்து வாங்கிட்டோம்.
இப்ப கையில பணம் இல்லாத்தால, வேடிக்கை மட்டும் பார்க்லாம். ப்ளாக் படிக்கலாம்.கமெண்ட் போடலாம்.

<==
Indha kodumailayum enna oru varuthamna namma panatha edho oru vellakaranum yaro oru ambaniyum eduthuttu poittangaley...
==>
=))))