Monday, December 24, 2007

24.12.2007 இன்றைய தகவல்

கடந்த வெள்ளியன்று அமெரிக்க பங்குச் சந்தை நன்றாக முடிந்திருப்பகால்,அதன் தாக்கத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தையும் 200 - 400 புள்ளிகள் உயரும் என்று எதிர்பார்த்ததுதான். ஆனால்,இவ்வளவு புள்ளிகள்(691) உயரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மென்பொருள் பங்குகள் (சத்யம்,விப்ரொ,டிசிஎஸ்,இண்ஃபோசிஸ்) நிறைய உயர்ந்ததால்தான் சென்செக்ஸ் இவ்வளவு புள்ளிகள் கூடியது போலும்.இன்ஃபோசிஸ் 4வது காலாண்டு அறிக்கை தாக்கல் செய்யும்வரை இந்த உயர்வு தொடரலாம்.

மேற்கத்திய நாட்டவர்க்கு இந்த மாதம்தான் ஆண்டுக்கணக்கு முடியும் மாதம். அதனால்,லாபத்தை உறுதி செய்வதற்க்காக அவர்கள் பங்குகளை விற்ப்பார்கள் என்ற விற்ப்பன்னர்கள் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு சரி என்பது போகப்போகத்தான் தெரியும்.

டாட்டா மோட்டார்ஸ்
டாட்டா மோட்டர்ஸ் ஃபோர்டின் "ஜாகுவர் - லேண்ட்ரோவர்" கையப்படுத்துதலை அடுத்து, அதற்க்கு டாட்டா மோட்டர்ஸ் கொடுக்கும் விலை 200 கோடி டாலர்கள் மிக மிக அதிகம் என்று "செய்திகள்"(வதந்தி) வருகின்றன். அதனால் வரும் நாட்களில் டாட்டா மோட்டர்ஸின் பங்கின் விலை குறையக்கூடும். இப்படித்தான்,டாட்டா ஸ்டீல் கோரஸை கையகப்படுத்தும்போதும் நடந்தது. நானும் இன்னும் கொஞசம் இந்தப் பங்குகளை வாங்கலாம் என்று இருக்கிறேன். மேலும்,எல்லாக் கார் நிறுவங்களும் உன்னிப்பாய் கவனிக்கும் டாட்டாவின் ரூ.1 லட்சம் கார், ஜனவரி 10ஆம் தேதிய இந்திய ஆட்டோமொபையில் கண்காட்சியில் காண்பிக்கப்படும் என்று தெரிகிறது.

Friday, December 21, 2007

21.12.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க

இண்டியா சிமெண்ட்

இண்டியா சிமெண்ட் ரூ.592 கோடி அளவில் கடன் வாங்குகிறார்கள், நிறுவன விரிவாக்கத்துக்கு. அடுத்த ஆண்டு மத்தி வாக்கில் இண்டியா சிமெண்டின் உற்ப்பத்தி இரண்டு மடங்காகுமாம். 40 - 50 மெகாவாட் மின் உற்ப்பத்தித்திறன் உள்ள மின்னாலை அமைக்கப் போகிறார்களாம். எரிபொருளுக்கான மூலப்பொருள் நிலக்கரியை கடல் வழியாக இறக்குமதி செய்ய தனியாக கப்பல் வாங்கப் போகிறார்களாம். மின்சார செலவும்,போக்குவரத்துச் செலவும் குறைந்தால் லாபம் அதிகரிக்குமாம். இண்டியா சிமெண்ட் பங்கு வைத்திருப்பவர்கள் அடுத்த காலண்டு அறிக்கை வருவதற்கு முன் விற்று லாபம் பார்க்காலாம். மீண்டும் அது 250 260 என்று வரும்போது வாங்கிப்போடலாம்

21.12.2007 இன்றைய தகவல்

15ஆம் தேதித்க்குப்பின் சந்தை இறங்கும் என்று செய்திகளில் சொல்லப்பட்டபடியே சந்தை ஒரே நாளில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருக்கிறது.
இப்படித்தான் தீபாவளிக்கு முன்பும் சொன்னார்கள். சந்தை இறங்கியது. தீபாவளி முடிந்ததும் ஒரே நாளில் சென்செக்ஸ் 900 புள்ளிகளூக்குமேல் தாண்டியது. அதாவது, தீபாவளிக்குப்பின் குறையும் என்று கையில் பங்கு இல்லாமலே விற்று(short selling) வைத்தார்களாம். பின் சந்தை எதிர்பார்த்த அளவு விழாது என்றவுடன் விற்ற பங்கையே வாங்கி(short covering) கணக்கை நேர் செய்தார்களாம்.


இவர்கள் சந்தை இப்படித்தான் போகும் என்று ஆருடம் சொல்வதைவிட இப்படித்தான் போக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்க்கேற்றார்போல் பங்குகளை வாங்கியோ விற்றோ லாபம் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது.

டாட்டவுக்கு ஃபோர்டின் ஜாகுவார்,லேண்ட் ரோவர் விற்பனை பற்றிய அறிவிப்பு திங்களன்று வருமாம். ஆனல்,அதிகரப்பூர்வமான அறிவிப்பு ஜனவரி 2வது வாரத்தில்தான் வருமாம். இப்போது டாட்டா மோட்டர்ஸின் பங்கு விலை ரூ.705ல் இருக்கிறது. கொஞ்சம் பங்குகளை வாங்கியிருக்கிரேன்.

மத்திய அரசின் MRTPC அமைப்பு 1990ல் சிமெண்ட் நிறுவங்கள் தமக்குள் பேசி வைத்துக்கொண்டு விலையை கூட்டினவாம் !!!! இது பெரிய கண்டுபிடிப்பு. 18 வருடங்களில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் அந்த நிறுவங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். இது ஒரு எச்சரிக்கை. அவ்வளவே. சாதாரணமா இந்த மாதிரி அறிவிப்புகள் வந்தால் சிமெண்ட் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 10% வரை குறையும். ஆனால்,இபோது அப்படி எதுவும் நடக்காது என்று நம்பலாம்.

இப்போது மிட்கேப்,ஸ்மால்கேப் பங்குக்குத்தான் இப்போது கிராக்கி. கேப்பிடல் கூட்ஸ் பங்குகளுகு அவ்வளவு கிராக்கி இலை. பி ஹச் இ எல்லின் பங்குகள் ரூ.2371ல் இருக்கிறது. இதற்க்குமேல் கீழிறங்கும்னு தோணலை.வாங்க நினைத்திருந்தால் வாங்கலாம்.

மத்திய அரசு, அரசு நிறுவனங்கள் தன்னிடம் உள்ள உபரி நிதி மொத்த முதலீட்டை விட 3 மடங்கு அதிகமாக இருந்தால் அதற்க்கு முதலீட்டாளர்க்கு போனஸ் பங்கு கொடுக்கச் சொல்லியிருக்காங்க. எல்லா அரசு நிறுவங்களூம் 20,30 மடங்கு என்றூ உபரி நிதி வைத்திருக்கிராற்களாம். அதனால்,இந்தப்பங்குக்கும் போனஸ் கிடைக்கலாம்.

எஸ்ஸார் ஷிப்பிங்க் என்று ஒரு பங்கு 4 வாரங்களுக்குமுன் ரூ.50 என்ற அளவில்இருந்தது. அப்போது வாங்கப் பணம் இல்லை. இப்போது, அந்தப்பங்கு ரூ.124ல் இருக்கிறது.

இவ்வளவு களேபரத்திலும் பிரகாஷ் இண்டஸ்ட்ரியின் பங்கு கீழே விழவேயில்லை.

Monday, December 17, 2007

17.12.2007 இன்றைய தகவல்

பங்குச்சந்தையில் ரத்தக்களரி!!!

சென்ற வாரம் என் நண்பரிடம் அடுத்த வாரம் 15ம்தேதி பங்கு சந்தை குப்புற விழப்போகுதாம்னு சொன்னேன். அவரும்,"ஆமா,எனக்குத் தெரிந்த பங்குத்தரகு நண்பரொருவர் அப்படித்தான் சொன்னார்" என்றார். பின் சில தினங்களில் அவரே, "15ம் தேதி சனிக்கிழமை அல்லவா....விட்டா எல்லா விடுமுறை தினங்களிலும் ஏதாவது இப்படி சொல்வீங்கபோல"ன்னு என்னை கிண்டல் செய்தார்.

இன்று எதிர்பார்த்தபடியே மரண அடி. சென்செக்ஸ் 769 புள்ளிகள் விழுந்தது.

நான் வியாழன்று கணிசமான (வியாபார) பங்குகளை விற்றுவிட்டேன்.

டாட்டா மோட்டர்ஸை சென்ற வியாழன்று ரூ.780க்கு விற்றேன். அது ரூ.690 வரை சென்றது. ரூ.700க்கு BUY ஆர்டர் போட்டேன். என் கணக்கில் பணம் இல்லாததால் அது நிராகரிக்கப்பட்டு விட்டது. இப்போது அது ரூ.701ல் இருக்கிறது. அதை சிறிது எண்ணிக்கையில் வாங்கிப் போடலாம். என் அலுவலக நண்பரொருவர் டாட்டா மோட்டர்ஸை ஃபோர்டின் ஜாகுவார் டீலிங் முடிந்தபின் வாங்குங்கள். அது இன்னும் குறைய வாயிப்பிருக்கிறது என்றார். அவர் சொல்வது மாதிரி டாட்டா ஸ்டீல் கோரஸை வாங்கியபோது நடந்தது.

நாளை பார்க்கலாம். சந்தை எந்த திசையில் பயணிக்கிறது என்று. ஆகஸ்ட் 16,17 ல் நடந்த மாதிரி இரண்டு நாளிலா, அக்டோபர் 17 மாதிரி ஒரு வாரத்திலா அல்லது அடுத்த ஆண்டு பிறக்கும்வரையா இந்த இறக்கம் இருக்கும் என்று.

17.12.2007 பரஸ்பர நிதி

1.டாரஸ் டிஸ்கவரி ஃபண்ட் - ஈக்விடி டைவர்சிஃபைடு ; ஓபன் என்டெட்
சம்பாதித்த லாபம் 1 மாதத்தில் 28%
3 மாதத்தில் 54%
1 வருடத்தில் 114%
நிதியின் மொத்த சொத்து ரூ.34.44 கோடி(30/11/2007ல்)

2.டாரஸ் லிப்ரா டாக்ஸ்ஷீல்ட் - ஈக்விடி டாக்ஸ் ப்லான்னிங்
சம்பாதித்த லாபம் 1 மாதத்தில் 22.78%
3 மாதத்தில் 59%
1 வருடத்தில் 111%
நிதியின் மொத்த சொத்து ரூ.8.62 கோடி(30/11/2007ல்)

ஆனால்,இதில் அதிக ரிஸ்க்(1 ஸ்டார்) எடுக்கத் தயாராய் உள்ளவர்கள் முதலீடு செய்யலாம்.

Wednesday, December 12, 2007

12.12.2007 இன்றைய தகவல்

கடந்த 2 மாதமா பரஸ்பர நிதி நிறுவங்களுக்கு ரூ.20,000 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து 16 நிதித் திட்டங்களுக்கு வந்துள்ளதாம். இன்னும் நிறைய திட்டங்களை நிதி நிறுவங்கள் வெளியிட உள்ளனவாம். அதனால்தான் அடிப்படை கட்டுமானம்,ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் உச்சத்திற்க்கு பறக்கின்றன.

லான்கோ இன்ஃப்ராடெக்,ஓமேக்ஸ்,இண்டியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், ரிலையன்ஸின் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராடெக் எல்லாமே நன்றாக உயர்ந்துள்ளன.

பணம் இல்லாவிட்டால் நன்றாக லாபமீட்டாத பங்குகளை விற்று இந்தப் பங்குகளை வாங்கிப்பார்கலாம்.

Monday, December 10, 2007

10.12.2007 சாமான்யனின் மிகக் குறுகிய கால பங்குகள்

இந்த பங்குகளெல்லாம் ஏன் இப்படி விலை ஏறுதுன்னு தெரியல்லே.
கொஞ்ச நாள் வச்சிருந்திட்டு வித்து லாபம் பார்க்கலாம்.

1.பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ்

13 - 11 - 2007 விலை 197.50
10 - 12 - 2007 விலை 283.25
இந்த பங்கு தொடர்ந்து தினமும் 5% Upper Circuit-டை தொடுது. அடிப்படைலயும் நல்ல பங்கு மாதிரி தெரியுது.

2.எஸ்ஸார் ஷிப்பிங்
30 - 11 - 2007 விலை 53.90
10 - 12 - 2007 103. 45
நிர்வாகம் மோசமான நிர்வாகம். எஸ்ஸார் ஸ்டீல dlist பண்ண முயற்ச்சி செய்தாங்க. SAT(Securities Appellate Tribunal)அதை நிறுத்தி வச்சுருக்காங்க.

3.இஸ்பாட் இண்டஸ்ட்ரீஸ்
23 - 11 - 2007 விலை 39.10
10 - 12 - 2007 71.90


10.12.2007 பரஸ்பர நிதி(Mutual Fund)

நல்ல நிதியை எப்படிக் கண்டுபிடிப்பது?

தொடர்ந்து 5 வருடத்திற்க்கு நல்ல லாபம் கொடுக்கும் நிதியை வாங்கணும்னு சொல்வாங்க.

http://www.valueresearchonline.com ல் ஒவ்வொரு வகையான நிதிக்கும் நட்சத்திர குறீயீடு கொடுத்து எல்லா நிதிகளையும் பட்டியலிட்டு இருப்பார்கள்.அதில் எதாவது ஒரு 5 நட்சத்திர நிதியை தேர்ந்தெடுக்கலாம்.

இப்போதெல்லாம்,முதலீட்டாளர்க்ளின் விருப்பம் அடிக்கடி மாறி வருகிறது.2 மாதங்களுகு முன்பு லார்ஜ் கேப் பங்குகளுக்கு நல்ல மவுசு.இப்போ ஸ்மால்,மிட் கேப் பங்குகளுக்கு நல்ல மவுசு. அதற்க்குத் தக்கவாறு, பரஸ்பர நிதியைத் தேர்ந்த்தெடுக்கணும்.

என்னைப்பொருத்த அளவில் ஒரு வருடம்,6 மாதம்,3 மாதம் என்ற அளவில் எந்த நிதி நல்ல லாபம் தருகிறதோ அதுவே சரியானது.மேலும்,அந்த நிதி முதலீடு செய்திருக்கும் பங்குகள்(அல்லது செக்டார்), அடிப்படையில் நல்ல பங்குகளாக இருக்க வேண்டும்.

இப்போ பங்குச் சந்தையில் பெட்ரோல்,மின்சார மற்றும் அடிப்படை கட்டமைப்பு பங்குகளுக்குத்தான் மவுசு. அதனால், Reliance Diversified Power Sector பண்டுதான் அதில் டாப். மணிகண்ட்ரோல் வலைத்தளதில் மொத்த நிதிகளிலுமே இதுதான் முதலாவது ரேங்க். அதில் அக்டோபர் 5ம்தேதி பணம் போட்டேன்.அப்போது அதன் NAV 61.58(2.25% நுழைவுக்கட்டணம் உள்பட). நேற்று(7.12.2007) அதன் என் ஏ வி 78.22

லாபாம் 78.22 - 61.58 = 16.64*100/61.58 = 27%

அதாவது, 2 மாதத்துக்கு 27% லாபம். வருடத்திற்க்கு 162% . அதாவது இந்த நிதி ஒரு வருடத்திற்க்கு இதே மாதிரி லாபம் தந்தால்!!!!!!

Wednesday, December 5, 2007

05.12.2007 பரஸ்பர நிதி(Mutual Fund)

நம்ம பங்கு வாங்கினா விலை குறையுது.வித்தா விலை கூடுது.இந்த வம்பே வேண்டாம்னு பேசாம பரஸ்பர நிதி பக்கம் போலாம்.முந்தின பதிவில் ஏன் தின வணிகம் பற்றியெல்லாம் வந்ததுன்னு இப்போ புரிந்திருக்கும், பங்கில் நேரடி முதலீடு,தின வணிகம் எல்லாவற்றையும் விட பரஸ்பர நிதியே ரொம்ப நல்லது என்று! என் முதலீட்டில் பெரும்பகுதி பரஸ்பர நிதி, ஃபிராவிடண்ட் நிதி,ஓய்வுகால நிதி போன்றவற்றிலேயே உள்ளது.

பரஸ்பர நிதி நிறுவங்கள் நம் போன்றவர்களிடமிருந்து பணம் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.இந்தியாவில் சுமார் 40 பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்ளன.

ஐசிஐசிஐ பரஸ்பர நிதி,பாரத ஸ்டேட் வங்கியின் எஸ்பிஐ பரஸ்பர நிதி,ரிலையன்ஸ் பரஸ்பர நிதி போன்றவை அதில் சில.ரிலையன்ஸ் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு, அதாவது முதலீட்டாளர்கள் போட்டிருக்கும் முதலீடு ரூ.70,000 கோடிக்கும்மேல். இது சென்ற வருடத்தில் சுமார் 36000 கோடிக்கு இருந்தது. அதாவது, ஒரு வருடத்தில், முதலீட்டாளர்கள் போட்டிருக்கும் பணம் இரட்டிப்பாயிருக்கிறது. பிறகு ஏன் பங்கு சந்தை இப்படி எகறாது?

பரஸபர நிதில யூனிட் வாங்கும்போது பங்கு சார்ந்த நிதிக்கு 2.25 அல்லது 2.5 சதவீதம் நுழைவுக்கட்டணம் இருக்கும். கடன் சார்ந்த திட்டங்களுக்கு அது சுமார் 1 சதவீதம் இருக்கும். முதலில் குறைந்த பட்சம் ரூ.5000 போட வேண்டியிருக்கும். அதன் பின் ரூ.500/1000ன் மடங்குகளில் பணம் போடலாம். ரிலையன்ஸில் ரூ.1ன் மடங்கில் பணம் போடலாம் என்று நினைக்கிறேன்.

யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு(Net Asset Value - NAV):

முதலீட்டாளர்ட்ட வாங்கின பணத்தை பங்குச் சந்தையில போட்டு, அன்றைக்கு அந்த பங்குகளின் முடிவு விலையை மொத்த யூனிட்களால் வகுத்து யூனிட்டின் நிகர மதிப்பை வெளீயிடுவார்கள்.
முதலில் பரஸ்பர நிதியில் ஒரு ஸ்கீம் வெளியிடும்போது ஒரு யுனிட்டின் விலை ரூ.10 என்று தொடங்குவார்கள். உதாரணத்துக்கு, இப்போது அந்த ஸ்கீமிகில் 10,000 யூனிட்டுகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஸ்கீமில் உள்ள மொத்த முதலீடு 10,000Xரூ.10=ரூ.1,00,000 இந்த ஒரு லட்சத்தை பரஸ்பர நிதி நிறுவனம் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக வை த்துக் கொள்வோம். அந்த பங்குகளின் இப்பொதைய மதிப்பு ரூ.1,25,000 என்று வைத்துக்கொள்வோம். முதலீடு செய்வற்க்கான செலவு முதலியாவற்றை இந்த 1.25 லட்சத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பங்கின் விலை உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் அவர்களின் இந்த செலவு மாறாது! செலவு போக மீதி ரூ.1,23,000 இருப்பதாக வைத்துகொள்வோம்.

இப்போது அந்த ஸ்கீமின்

யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு(NAV) = 1,23,000/10000=12.30
யூனிட்டின் இந்த NAV மதிப்பை மறுநாள் தினசரி பத்திரிக்கைகளில் பார்கலாம். இல்லையெனில் அந்தந்த நிதியின் வலைத்தளத்திலோ,பரஸ்பர நிதி சம்பந்தமாக உள்ள வளைத்தளத்திலோ பார்கலாம்.


பரஸ்பர நிதி வகைகள்:
பரஸ்பர நிதியில் பங்கு சார்ந்த, கடன் சார்ந்த, இரண்டும் சார்ந்த பேலண்ட்ஸ்ட், டைவர்சிஃபைடு போன்ற நிறைய வகைகளிருந்தாலும் புரிந்து கொள்ள கீழ்க்கண்ட 2 வகைகள்தான் முக்கியம்.

1.பங்கு சார்ந்த நிதி:முதலீட்டில் பெரும்பகுதி அதாவது 80 - 90 சதவீதம்வரை பங்கு சார்ந்த திட்டங்களில் முதாலீடு செய்வார்கள்.பங்கு சந்தை உயரும்போது யூனிட்டின் மதிப்பும் உயரும்.ப ங்கு சந்தை குறையும்போது யூனிட்டின் மதிப்பும் குறையும். அதிக ரிஸ்க் எடுக்க தைரியம் உள்ளவர்கள் இதில் பணம் போடலாம். வருடத்திற்க்கு 30,40 சதவீதம் என்று லாபம் வரும். பங்கு சந்தை விழும்போது லாபம் குறையும் என்பது சொல்ல வேண்டியதில்லை.


2.கடன் பத்திரங்கள் சார்ந்த நிதி: இந்த மாதிரி நிதித் திட்டங்களில் பெரும்பகுதி அரசுக்கடன் பத்திரங்கள், பெரிய நிறுவனங்களின் வைப்பு நிதி போன்றவற்றில் பணம் போட்டிருப்பார்கள். லாபம் வருடத்திற்க்கு 10,12 சதவீதம் என்று வரும். ஆனல்,முதலுக்கு மோசமில்லை. போட்ட பணம் குறையாது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இதில் பணம் போடலாம்.

பரஸ்பர நிதியில்சேர என்னென்ன் இருக்க வேண்டும்?

பான் அட்டை
இப்போதெல்லம் எதற்க்கும் இருப்பிடச்சான்று கேட்பவர்கள் இதற்க்கும் கேட்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஐ சி ஐ சி,கோடக் மஹின்ட்ரா வங்கிகளில் பரஸ்பர நிதிக்கென்று தனியாக கணக்கு துவங்கலாம். யூனிட்டுகள் அதன் வலைத்தளங்களினின்மூலம் எளிதாக வங்க/விற்க்கலாம்.