நம்ம பங்கு வாங்கினா விலை குறையுது.வித்தா விலை கூடுது.இந்த வம்பே வேண்டாம்னு பேசாம பரஸ்பர நிதி பக்கம் போலாம்.முந்தின பதிவில் ஏன் தின வணிகம் பற்றியெல்லாம் வந்ததுன்னு இப்போ புரிந்திருக்கும், பங்கில் நேரடி முதலீடு,தின வணிகம் எல்லாவற்றையும் விட பரஸ்பர நிதியே ரொம்ப நல்லது என்று! என் முதலீட்டில் பெரும்பகுதி பரஸ்பர நிதி, ஃபிராவிடண்ட் நிதி,ஓய்வுகால நிதி போன்றவற்றிலேயே உள்ளது.
பரஸ்பர நிதி நிறுவங்கள் நம் போன்றவர்களிடமிருந்து பணம் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.இந்தியாவில் சுமார் 40 பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்ளன.
ஐசிஐசிஐ பரஸ்பர நிதி,பாரத ஸ்டேட் வங்கியின் எஸ்பிஐ பரஸ்பர நிதி,ரிலையன்ஸ் பரஸ்பர நிதி போன்றவை அதில் சில.ரிலையன்ஸ் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு, அதாவது முதலீட்டாளர்கள் போட்டிருக்கும் முதலீடு ரூ.70,000 கோடிக்கும்மேல். இது சென்ற வருடத்தில் சுமார் 36000 கோடிக்கு இருந்தது. அதாவது, ஒரு வருடத்தில், முதலீட்டாளர்கள் போட்டிருக்கும் பணம் இரட்டிப்பாயிருக்கிறது. பிறகு ஏன் பங்கு சந்தை இப்படி எகறாது?
பரஸபர நிதில யூனிட் வாங்கும்போது பங்கு சார்ந்த நிதிக்கு 2.25 அல்லது 2.5 சதவீதம் நுழைவுக்கட்டணம் இருக்கும். கடன் சார்ந்த திட்டங்களுக்கு அது சுமார் 1 சதவீதம் இருக்கும். முதலில் குறைந்த பட்சம் ரூ.5000 போட வேண்டியிருக்கும். அதன் பின் ரூ.500/1000ன் மடங்குகளில் பணம் போடலாம். ரிலையன்ஸில் ரூ.1ன் மடங்கில் பணம் போடலாம் என்று நினைக்கிறேன்.
யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு(Net Asset Value - NAV):
முதலீட்டாளர்ட்ட வாங்கின பணத்தை பங்குச் சந்தையில போட்டு, அன்றைக்கு அந்த பங்குகளின் முடிவு விலையை மொத்த யூனிட்களால் வகுத்து யூனிட்டின் நிகர மதிப்பை வெளீயிடுவார்கள்.
முதலில் பரஸ்பர நிதியில் ஒரு ஸ்கீம் வெளியிடும்போது ஒரு யுனிட்டின் விலை ரூ.10 என்று தொடங்குவார்கள். உதாரணத்துக்கு, இப்போது அந்த ஸ்கீமிகில் 10,000 யூனிட்டுகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஸ்கீமில் உள்ள மொத்த முதலீடு 10,000Xரூ.10=ரூ.1,00,000 இந்த ஒரு லட்சத்தை பரஸ்பர நிதி நிறுவனம் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக வை த்துக் கொள்வோம். அந்த பங்குகளின் இப்பொதைய மதிப்பு ரூ.1,25,000 என்று வைத்துக்கொள்வோம். முதலீடு செய்வற்க்கான செலவு முதலியாவற்றை இந்த 1.25 லட்சத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பங்கின் விலை உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் அவர்களின் இந்த செலவு மாறாது! செலவு போக மீதி ரூ.1,23,000 இருப்பதாக வைத்துகொள்வோம்.
இப்போது அந்த ஸ்கீமின்
யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு(NAV) = 1,23,000/10000=12.30
யூனிட்டின் இந்த NAV மதிப்பை மறுநாள் தினசரி பத்திரிக்கைகளில் பார்கலாம். இல்லையெனில் அந்தந்த நிதியின் வலைத்தளத்திலோ,பரஸ்பர நிதி சம்பந்தமாக உள்ள வளைத்தளத்திலோ பார்கலாம்.
பரஸ்பர நிதி வகைகள்:
பரஸ்பர நிதியில் பங்கு சார்ந்த, கடன் சார்ந்த, இரண்டும் சார்ந்த பேலண்ட்ஸ்ட், டைவர்சிஃபைடு போன்ற நிறைய வகைகளிருந்தாலும் புரிந்து கொள்ள கீழ்க்கண்ட 2 வகைகள்தான் முக்கியம்.
1.பங்கு சார்ந்த நிதி:முதலீட்டில் பெரும்பகுதி அதாவது 80 - 90 சதவீதம்வரை பங்கு சார்ந்த திட்டங்களில் முதாலீடு செய்வார்கள்.பங்கு சந்தை உயரும்போது யூனிட்டின் மதிப்பும் உயரும்.ப ங்கு சந்தை குறையும்போது யூனிட்டின் மதிப்பும் குறையும். அதிக ரிஸ்க் எடுக்க தைரியம் உள்ளவர்கள் இதில் பணம் போடலாம். வருடத்திற்க்கு 30,40 சதவீதம் என்று லாபம் வரும். பங்கு சந்தை விழும்போது லாபம் குறையும் என்பது சொல்ல வேண்டியதில்லை.
2.கடன் பத்திரங்கள் சார்ந்த நிதி: இந்த மாதிரி நிதித் திட்டங்களில் பெரும்பகுதி அரசுக்கடன் பத்திரங்கள், பெரிய நிறுவனங்களின் வைப்பு நிதி போன்றவற்றில் பணம் போட்டிருப்பார்கள். லாபம் வருடத்திற்க்கு 10,12 சதவீதம் என்று வரும். ஆனல்,முதலுக்கு மோசமில்லை. போட்ட பணம் குறையாது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இதில் பணம் போடலாம்.
பரஸ்பர நிதியில்சேர என்னென்ன் இருக்க வேண்டும்?
பான் அட்டை
இப்போதெல்லம் எதற்க்கும் இருப்பிடச்சான்று கேட்பவர்கள் இதற்க்கும் கேட்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஐ சி ஐ சி,கோடக் மஹின்ட்ரா வங்கிகளில் பரஸ்பர நிதிக்கென்று தனியாக கணக்கு துவங்கலாம். யூனிட்டுகள் அதன் வலைத்தளங்களினின்மூலம் எளிதாக வங்க/விற்க்கலாம்.
Wednesday, December 5, 2007
05.12.2007 பரஸ்பர நிதி(Mutual Fund)
ஆக்கம் சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) at Wednesday, December 05, 2007
Labels: பரஸ்பர நிதி
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நீங்கள் ஏன் பங்கு reccomend பன்ன கூடது?
பிரசன்னா,
ஹி,ஹி அதுக்குத்தான் அங்கே,இங்கே காப்பியடிச்சு எழுதறனே.
சிவா,
சின்ன சின்ன பதிவா போட்டா...நம்ம மக்கள் பார்க்க (படிக்க) எளிதா இருக்கும்!
பயனுள்ள தகவல்... 'revise' பண்ண ஒரு வாய்ப்பு 'தந்ததற்கு' நன்றி!
வாங்க தென்றல்,
சின்ன சின்ன பதிவா போட முயற்சி செய்றேன்
Post a Comment