பங்குச்சந்தையில் ரத்தக்களரி!!!
சென்ற வாரம் என் நண்பரிடம் அடுத்த வாரம் 15ம்தேதி பங்கு சந்தை குப்புற விழப்போகுதாம்னு சொன்னேன். அவரும்,"ஆமா,எனக்குத் தெரிந்த பங்குத்தரகு நண்பரொருவர் அப்படித்தான் சொன்னார்" என்றார். பின் சில தினங்களில் அவரே, "15ம் தேதி சனிக்கிழமை அல்லவா....விட்டா எல்லா விடுமுறை தினங்களிலும் ஏதாவது இப்படி சொல்வீங்கபோல"ன்னு என்னை கிண்டல் செய்தார்.
இன்று எதிர்பார்த்தபடியே மரண அடி. சென்செக்ஸ் 769 புள்ளிகள் விழுந்தது.
நான் வியாழன்று கணிசமான (வியாபார) பங்குகளை விற்றுவிட்டேன்.
டாட்டா மோட்டர்ஸை சென்ற வியாழன்று ரூ.780க்கு விற்றேன். அது ரூ.690 வரை சென்றது. ரூ.700க்கு BUY ஆர்டர் போட்டேன். என் கணக்கில் பணம் இல்லாததால் அது நிராகரிக்கப்பட்டு விட்டது. இப்போது அது ரூ.701ல் இருக்கிறது. அதை சிறிது எண்ணிக்கையில் வாங்கிப் போடலாம். என் அலுவலக நண்பரொருவர் டாட்டா மோட்டர்ஸை ஃபோர்டின் ஜாகுவார் டீலிங் முடிந்தபின் வாங்குங்கள். அது இன்னும் குறைய வாயிப்பிருக்கிறது என்றார். அவர் சொல்வது மாதிரி டாட்டா ஸ்டீல் கோரஸை வாங்கியபோது நடந்தது.
நாளை பார்க்கலாம். சந்தை எந்த திசையில் பயணிக்கிறது என்று. ஆகஸ்ட் 16,17 ல் நடந்த மாதிரி இரண்டு நாளிலா, அக்டோபர் 17 மாதிரி ஒரு வாரத்திலா அல்லது அடுத்த ஆண்டு பிறக்கும்வரையா இந்த இறக்கம் இருக்கும் என்று.
Monday, December 17, 2007
17.12.2007 இன்றைய தகவல்
ஆக்கம் சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) at Monday, December 17, 2007
Labels: பங்கு
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Present Sir.
Today I have gone for some other important work while afternoon I got a SMS from CNBC market crash about 400 point. Evening I checked my portfolio and there is no much dent.
As of now most of my stocks are Tech Stocks.
This whole week I've doubt whether I can trade due to my work. let us see what is going to happen.
Any how I'm sitting in high degree of cash and expecting more correction.
Cheers!!!!
Tata Motors news ia very Informative .
வாங்க மங்களூர் சிவா,
<=
Any how I'm sitting in high degree of cash and expecting more correction.
==>
ஓ! சென்செக்ஸ் 17,000 வரை கீழிரங்கும்னு சொல்ராங்களே. இருக்கலாம்.அது வரும்போதுதானே தெரியும்.
<= Tata Motors news ia very Informative .==>
இது மாறி நிறைய பங்குகள் இருக்கு. எஸ்ஸார் ஆயில கொஞ்சம் நல்லா கவனிக்கலே. இன்னைக்கு அது 10% மேலேறிடுச்சி!!!
உங்களின் பின்னோட்டம் பார்த்து விட்டு, இன்று தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன். மிகவும் நல்ல தகவல்கள் சொல்லி வருகிறீர்கள்..
பாராட்டுக்கள். நன்றிகள்..
டாடா மோட்டார்ஸ் வரும் வாரங்களில் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது என தகவல்கள் சொல்கின்றன.
Post a Comment