Friday, January 25, 2008

25.01.2008 இன்றைய பங்குத் தகவல்

பங்குச்சந்தை தான் வாங்கிய "மரண அடி"யிலிருந்து கொஞ்ச கொஞ்சமா மேலெழுந்து வர்ர மாதிரி தெரியுது.


கடந்த 2 வாரங்களா நிறுவங்களின் காலாண்டு அறிக்கை வெளி வந்துகிட்டு இருக்கு. கிட்டத்தட்ட எல்லா நிறுவங்களும் நல்ல லாபம் காமிச்சு இருக்காங்க. கடந்த 4 காலாண்டுகளா குறைவான வளர்ச்சியா(deceleration) இருந்தது, இப்ப அதிக வளர்ச்சிய(acceleration) நோக்கி போய்ட்டிருக்காம்.அதனால, "இந்தியா வளர்ச்சி கதை" (India Growth story)இன்னும் நீர்த்துபோகாம இருக்குன்னு நம்பலாம்.

அதனால, இப்ப வாங்கின பங்குச் சந்தை "மரண அடி" சில வாரங்களில்/மாதங்களில் சரியாய்விடும்னு நம்பலாம்.

என்னுடன் வேலை பார்ப்பவர் கடந்த 6 மாதங்களாக முதலீடு செய்யாமல் பணத்தை கையில் வைத்திருப்பதாகவும், எப்போது பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று தெரியவில்லை என்றும் சொன்னர்.அவரும் நானும் பங்குச்சந்தையைப் பற்றி பேசுவோம்.மென்பொருளாளர்கள் வேறு எதைப்பற்றி பேசுவோம்! அவருக்கு நிறைய விடயங்கள் பங்குத்தரகர்,நண்பர் மூலமாக தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.ஆனால், அவர், தான் யூகித்த ஒரு விடயம்கூட சரியாக நடக்கவில்லை என்று வருத்தப்பட்டார். பேச்சின் முடிவில் அவர் என்னிடம் கேட்கும் கேள்வி "இனிமேல் சென்செக்ஸ் உயருமா/விழுமா? இபோது எந்த பங்கை வாங்குவது?". என்னமோ எனக்குத்தான் பங்குச்சந்தையின் நுணுக்கம் தெரிந்ததுபோல. அவர் சொன்ன தகவல். ரிலையன்ஸ் பவர் ஐபிவோ(IPO)வில் பங்கு கிடைக்காதவர்களுக்கு திரும்பி வரவேண்டிய பணம், வரும் செவ்வாயன்று திரும்பி வருமாம். அப்பணம் திரும்பவும் பங்குச்சந்தைக்குத்தான் வரும் என்று யூகிக்கலாம்.

1 comment:

Tech Shankar said...

உங்கள் தகவல்களுக்கு நன்றிகள்... என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்