Saturday, February 2, 2008

02.01.2008 இன்றைய பங்குத் தகவல் - ஆரம்பிச்சுட்டாங்கய்யா,ஆரம்பிச்சுட்டாய்ங்க

நேற்று சென்செக்ஸ் ஐரோப்பிய சந்தைகளை ஓட்டி 593 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இனிமேலும் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை.

சென்செக்ஸ் 19500ல் நின்றால், அதுக்குமேலேயும், இல்லையெனில் 16500க்கு வருமெனவும் நாணயம் விகடனில் சொல்கிரார்கள்.

நான் அப்பவே சொன்னேன்ல:

நவம்பரிலேயெ இப்படி சந்தை விழும்னு சொன்னாங்களாம். நான் நாணயம் விகடனை ஆரம்பத்திலிருந்து படித்து வருகிரேன். ஜூன் 2006ல் சந்தை விழும்வரை சொன்ன எச்சரிக்கைகள் ஓரளவு பலித்தது. அதற்க்கப்புரம், அவர்கள் சொன்ன எச்சரிக்கை எதுவும் பலிக்கவில்லை. அதன் பின், அவர்கள் எச்சரிக்கை செய்வதையே விட்டுவிட்டார்கள்! பல செய்திகளில் பயந்தபடியே, எனக்குக்கூடத்தான் சந்தை ஜனவரியில் விழலாம் என்று டிசம்பரிலேயே தெரிந்தது =) அதனால்,பரஸ்பர நிதியில் பணம் போடுவதை நிறுத்தி வைத்தேன்.

இந்தியா சிமெண்ட்ஸ்: விலை ரூ.204

நாணயம் விகடனிலும், தலாலிலும் பரிந்துரைத்திருக்கிரார்கள். மொத்த லாபம் 47 சதவீதமும், நிகர லாபம் 10 மடங்காகவும் ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளதாம். தென்னிந்தியாவில் சிமெண்ட்டுக்கான தேவை வருடத்துக்கு 10 சதவீதம் அதிகரிக்கிரதாம். இந்தியா சிமெண்ட்ஸுக்கு 12 - 14000 ஏக்கர் நிலம் உள்ளதாம். சிமெண்ட்டின் விலைகள் அப்படியே குறையாமல் இருக்குமாம். கடந்த 1 மாதத்தில் வர்த்தகமான பங்குகளின் அளவு அதிகரித்து இருப்பதால், இப்பங்கின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாம்.

நான் முன்பு இப்பங்கினை ரூ.310க்கு வித்தேன். இன்னும், கொஞ்சம் பங்குகள் - லாப பங்குகள் என்கிட்ட இருக்கு.

என் அபிப்ராயம் : பாகிஸ்தானிலிருந்து சிமெண்ட் ஏற்றுமதி செய்ய இன்னும் 5 நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாம். மேலும், விண்ணை முட்டும் அளவிற்க்குப்போன ரியல் எஸ்டேட் விலைகளும் குறைய ஆரம்பித்துள்ளனவாம். அதனால், இனிமேல் சிமெண்ட்டின் விலை இதைவிடக் கூடுவதற்க்கு வாய்ப்பு இல்லை. அதனால், சிமெண்ட் பங்குகளின் விலையும் முன்புபோல் வேகமா ஏராதுன்னு நினைக்கிரேன்.

டாட்டா மோட்டார்ஸ்: விலை ரூ.754
நேத்து இப்பங்கு கிட்டத்தட்ட 7 சதவீதம் உயர்ந்தது. இப்பங்கு ரூ.780 - 800 வந்தால் விற்றுவிட்டு விலை குறைந்ததும் திரும்ப வாங்கலாம் என்றிருக்கிரேன். இன்னும் ஒரு வாரத்தில் டாட்டாவின் ஜாகுவார்-லேண்ட் ரோவர் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகுமாம். அப்போது இப்பங்கின் விலை குறைய வாய்ப்புள்ளதுன்னு சொல்ராங்க.

6 comments:

Anonymous said...

என் அபிப்ராயம் : பாகிஸ்தானிலிருந்து சிமெண்ட் ஏற்றுமதி செய்ய இன்னும் 5 நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாம்.

இறக்குமதி?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

அனானி நண்பா, பின்றீங்க.
பதிவுலக மக்கள் கண்ல கடலை எண்ணெய்( விளக்கெண்ணெய்னு எவ்வளவு நாள்தான் சொல்ரது =) ) விட்டு பதிவைப் பார்ப்பீங்கன்னுதான் முடிந்தவரை ஃப்ரூப் பார்த்துத்தான் வெளியிட்ரேன்.

இறக்குமதி என்றுதான் டைப் செய்தேன்.
நம் நாட்டு நிறுவனமா இருந்தால் இறக்குமதி, பாகிஸ்தான் நிறுவனமாயிருந்தால் ஏற்றுமதி. சரிதானே?

அடிக்கடி இப்பதிவுக்கு வாங்க.

GANESH PL said...

நண்பர் சிவா,

தங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன், நானும் நீண்ட நாள் நாணயம் விகடன் வாசகன், அதிலும் தற்சமயம் சந்தை விழும் என்ற கணிப்பு ஏதும் வந்ததாக தெரியவில்லை, எல்லோரும் போல் பட்ஜெட் முன் அல்லது பின் சந்தை விழும் என்ற கணிப்புதான்,.....
தாங்கள் ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை, வாரம் ஒன்று அல்லது இரண்டு பதிவுடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்,... தொடர்ந்து எழுதுங்கள்..... நன்றி....

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க கணேஷ்,
<==
தாங்கள் ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை, வாரம் ஒன்று அல்லது இரண்டு பதிவுடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்,... ==>
நன்றி. என் பதிவு அவ்ளோ நல்லா/உபகோகமா இருக்கா? (வடிவேலு பாணியில் படிக்கவும்) நான் அழுதுடுவேன். தினமும் எழுதனும்னு ஆசைதான்.முயற்ச்சி செய்ரேன்.

மங்களூர் சிவா said...

//
நேற்று சென்செக்ஸ் ஐரோப்பிய சந்தைகளை ஓட்டி 593 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இனிமேலும் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை.
//
அண்ணாத்த பிப்ரவரி கடைசிக்குள்ள 21000 பாயிண்டுக்கு போயிடுமாம் சென்செக்ஸ்.

இதெல்லாம் மார்கெட்ல பேசிக்கிறதுதான். நான் சொல்லலை. அதனால இந்த மாதிரி எதுவும் யூக அடிப்படை தகவல்களை நான் என் பதிவுல எழுதறதும் இல்லை.
:)))

எனக்கு இந்த சென்செக்ஸ் பத்தி எல்லாம் கவலை இல்லை!!

'என் வழி தனி வழி'

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<===
மங்களூர் சிவா said...
அதனால இந்த மாதிரி எதுவும் யூக அடிப்படை தகவல்களை நான் என் பதிவுல எழுதறதும் இல்லை.
:)))

எனக்கு இந்த சென்செக்ஸ் பத்தி எல்லாம் கவலை இல்லை!!

'என் வழி தனி வழி'

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
==>
இந்த மாதிரி யூகத்தகவல்கள் ஒரு சுய மதிப்பீட்டுக்குத்தானே ஒழிய வெரொன்றுக்கும் இல்ல.

நீங்க முதல்ல பதிவ போடுங்க.அது ஜனவரி 23ஆம் தேதியோட நிக்குது.

ஆமா, நீங்க வாரன் பஃபெட்டோட சிஷ்யன்னு எங்களுக்கு தெரியுமே. அதனால உங்க வழி தனி வழிதான்.

எந்த வழியா இருந்தாலும் (பங்குச்சந்தையில்)அடி வாங்காம(அல்லது குறைந்தபட்ச அடியோட) போரோமங்றதுதான் முக்கியம் =)))