Tuesday, February 12, 2008

12.02.2008 இன்றைய பங்குத் தகவல்

பங்குச் சந்தையில் சுனாமி
சுனாமி அடிச்சப்ப எப்படி இருந்திருக்கும்னு இப்போ நல்லா புரியுது. அந்த சமயத்தில் அப்படி தப்பிப் பிழைச்சவன்கிட்ட எப்டி இருக்கன்னு கேட்டா எப்படி இருக்கும்? அது மாதிரி இருக்கு நம்ம நிலைமை. சாதாரணமா ஒரு 2,3 நாள் பங்குச் சந்தைல புள்ளிகள் குறையும், பின் மேலேறும்.
ஆனா, இப்ப இறங்கற சென்செக்ஸ் புள்ளிகள், நிக்காம பாதாளத்துக்குப் போய்ட்டு இருக்கற மாதிரி தெரியுது.
ஒரு மாசத்துக்குமுன் சென்செக்ஸ் மேலே போனப்ப, அது 25000 போகும்னு சொன்ன அதே பங்குச்சந்தை வல்லுனர்கள் இப்பொ அது 15000 இல்ல 12500 போகும்னு சொல்ல ஆரம்பிசுட்டாங்க.
அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பணத்தை வேக வேகமா பங்குச் சந்தையிலிருந்து எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க திரும்ப வந்து பணத்தைப் போடறவரைக்கும் சந்தை இப்படித்தன் போகும்போல. மத்திய அரசு பட்ஜெட்ட தாக்கல் செஞ்சப்புரம், சந்தை நல்லா இருக்கும்னு சொல்ராங்க.
கடந்த 2,3 மாசமா வாங்கிய பங்குகள் எல்லாம் 30,40,50 சதவீதம்னு மதிப்பு குறைஞ்சிருக்கு. இதே வேகத்தில போனா அப்புரம் பங்கு அதனோட முகமதிப்பு(சாதாரணமா ரூ.10)க்கு வந்திரும்போல. அப்படி வாங்கின பங்குகளை அப்படியே விட்டுவச்சுட்டு, அது இன்னும் 2,3,6 மாதம் கழித்து பழைய விலைக்கு வரும்னு இருந்துரலாம். இல்ல, இந்த நஷ்டம் போதும்னு நஷ்டத்துக்கே வித்துட்டு, இன்னும் நல்ல விலை வரும்வரை காத்திருக்கலாம்.
இந்த மாதிரி நிச்சயமில்லாத சந்தையில டிரேட் செய்யாம இருக்கரதே ஒரு டிரேட்னு ஒருத்தர் வணிக டிவி சேனலில் சொன்ன மாதிரி, ஒண்ணும் வாங்காம/விக்காம இருந்திரலாம்போல.
கேர்ன் எனர்ஜி:
இந்த வீழ்ச்சியிலயும் கேர்ன் எனர்ஜி இன்னைக்கு 4 சத வீதம் கூடிச்சு. இந்தப் பங்கு மேல போனாலும் நிதானமா போகுது. கீழ இறங்குனாலும் நிதானமா இறங்குது. இப்போ இதன் விலை ரூ.200. சந்தை இறங்குரப்ப 180 - 190 அளவுல நான் இப்பங்கை வாங்கலாம்னு இருக்கேன்.

8 comments:

tbr.joseph said...

பங்கு சந்தையில நாம longtime investorஆ இல்ல shorttime investorஆன்னு முதல்லயே தீர்மானிச்கிக்கணும். நம்மள மாதிரி தனி நபர் முதலீட்டாளர்கள் வாங்கி விக்கறத நம்பாம கிடைக்கற டிவிடண்ட மட்டும் நம்பி IPOவுல முதலீடு செஞ்சா இந்த ஏற்றமும் வீழ்ச்சியும் நம்மள பாதிக்காது.

எங்கள மாதிரி நிறுவனங்களில் உள்ள முதலீட்டு இலாக்காக்களுக்குத்தான் இந்த கடும் வீழ்ச்சி மரண அடியாக விழுகிறது. ஏறும் என்றூ நினைத்து முதலீடு செய்து இரண்டு நாட்களுக்குள் இப்படி வீழ்ந்தால் முதலீடு செய்யலாம் என்று பரிந்துரைத்த அதிகாரி பல இரவுகள் உறக்கம் விழித்திருப்பார். நானும் ஒரு காலத்தில் இந்த இலாக்காவில் பணியாற்றி பல இரவுகளில் உறக்கம் களைந்திருக்கிறேன்..ஹர்ஷத் மேத்தாவின் கை மேலோங்கி இருந்த காலத்தீல் துவங்கி அவர் வீழ்ந்த காலம் வரை இந்த இலாக்காவில்தான் இருந்தேன்....நினைத்தாலே பகீர் என்று இருக்கிறது.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க டிபிஆர்,
உங்க மின்னஞ்சலை ஜிமெயிலில் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி.
இப்படியா திக்கு முக்காட வக்கிறது?
பங்கு வணிகத்துல உங்களுக்கோட அனுபவத்த பதிவு மூலமா பகிர்ந்துக்கிட்டீங்கன்னா நல்ல இருக்குமே. இப்பல்லாம் சிற்றூர்கள்ளகூட பங்கு வணிகம்/பரஸ்பர சகாய நிதி பற்றிய ஆர்வம் பெருகியிருக்கு.
<==
tbr.joseph said...
நம்மள மாதிரி தனி நபர் முதலீட்டாளர்கள் வாங்கி விக்கறத நம்பாம கிடைக்கற டிவிடண்ட மட்டும் நம்பி ஈPஓவுல முதலீடு செஞ்சா இந்த ஏற்றமும் வீழ்ச்சியும் நம்மள பாதிக்காது. ==>
ஆமா. நீங்க சொல்ரது ஓரளவுக்கு சரி.

ரூ.10 முக மதிப்புள்ள பங்கை ரூ.100க்கு பங்குச் சந்தையில வாங்கி, அதுக்கு 100 சதவீதம்(ரு.10) டிவிடென்ட் வருசா வருசம் கிடச்சா சரி. இல்லன்னா, யுனிடெக் மாதிரி வருசா வருசம், போனஸ் பங்கா முதலீட்டாளர்க்கு கொடுத்து அது பல மடங்கு பெருகினா, நல்ல லாபம் வரும்.

ஆனா, ரூ.2000/ரூ.3000 விலையுள்ள பங்கில் ரூ.10 டிவிடென்ட் எவ்வித தாக்கத்தையும் ஏற்ப்படுத்தாதுங்கறது என்னோட கருத்து. எனக்கு ரூ.10,20,50ன்னு அப்பப்ப டிவிடென்ட் கிடச்சிருக்கு. ஆனா, இந்த மதிப்பு, நான் செய்த முதலீட்டுக்கு யானைப்பசிக்கு சோளப்பொறிதான்.

அடிக்கடி இந்தப் பதிவுக்கு வாங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஓ, நீங்க ஐபிஓ-ன்னு சொல்லியிருக்கீங்களா? நான் கவனிக்கலை. ரிலையன்ஸ் பவர் ஐபிஓ-க்கு கிடச்ச வரவேற்ப்ப பாத்தப்புரம் இனிமே குறு முதலீட்டாளர் ஐபிஓ பக்கமே தலை வச்சு படுக்க மாட்டாங்க.
கடந்த 6 மாதமா வர்ர எல்லா ஐபிஓ-வுமே, ரொம்ப அதிக விலைக்கு விற்க்கிறாங்க. அந்த ஐபிஓ, அவ்வளவு மதிப்புதான் பெறும்னு , சாதாரண முதலீட்டாளர்க்கு தெரியறதில்ல.

GANESH said...

சிவா,
சரியாக சொல்லியுள்ளீர்கள், போர்ட்போலியோ பங்குகள் எல்லாம் விலைகள் மிகமிக குறைந்துவிட்டன, நஷ்டத்துடன் வெளியேறுவதா அல்லது பொறுத்திருந்து வாங்கிய விலை வந்தவுடன் விற்று விட்டு வெளியேறுவதா என்பதே தற்சமயம் என் முன் உள்ள ஒரே சிந்தனை, முடிவு எப்படி எடுப்பது என்பதே தடுமாற்றமாகத்தான் உள்ளது,...

Delhi_Tamilan said...

first time here, nice to see a blog with different subject... nice attempt...

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க கணேஷ்,
முடிவ தங்களூக்குத் தெரிந்த தகவல்களை வைத்து மிகக் கவனமா எடுங்க.
என் முடிவ நான் எடுத்துட்டேன்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க டெல்லி தமிழன்,
நன்றி, அப்பப்ப இப் ப்ளாக்குக்கு வந்து எட்டிபாருங்க.

மங்களூர் சிவா said...

சாமான்யன் அண்ணாத்தே,

ச்சும்மா இந்த பூச்சாண்டி சரிவுக்கெல்லாம் மனச தளர விட்டுறாதீங்க.

invest your surplus money and forget.

இப்பிடித்தான் நான் எல்லாருக்கும் சொல்லிகிட்டிருக்கேன் இன்னைக்கு வரைக்கும். போர்ட்போலியோ டேமேஜ் ஆயிருக்கு ஆனா முதலுக்கு மோசம் இல்லை. இன்னைக்கு வரைக்கும்.