சென்செக்ஸ் 19000க்கு மேல போனாதான் "புல் ரன்"ன்னு சொல்ராங்க. கடந்த 12ம் தேதி சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் விழுந்ததுக்கு யாரோ வேண்மின்னே செய்த காரியம்னு தெரியுது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் பட்டியல் செய்றப்போ, வேணுமின்னே அவரோட குழு கம்பெனிகளின் பங்கு விலையை வேணுமின்னே குறைச்சிருக்காங்கண்ணும் அத விசாரிக்கணுமின்னும் அனில் "செபி(SEBI)"க்கு ஓலை கொடுத்திருக்கார்.
ரிலையன்ஸ் பவர் பங்கு பட்டியலிடப்பட்டபின் முதலீட்டாளர் அடைந்த நட்டத்த ஈடு கட்ட போனஸ் பங்கு கொடுக்கப் போராங்களாம். ரிலையன்ஸோட பவரோட விலை அதிகம்னு இப்ப சொல்ராங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அதனோட விலை ரூ.250 - 300 என்று வருமாம்.
2007 டிசம்பர் மாதத்துடன் முடிந்த 1 வருட வளர்ச்சி, கம்பெனிகளின் வளர்ச்சி, 2006வுடன் ஓப்பிடுபோது அவ்ளோ சிறப்பா இல்லையாம். இருந்தாலும் மத்த நாடுகளோட ஓப்பிடும்போது வளர்ச்சி நல்லாத்தான் இருக்குமாம்.
சிமெண்ட் துறை : சிமெண்ட் துறை 2006ல் சுமார் 200 சதவீதத்துக்கும்மேல் வளர்ச்சியடந்தது. ஆனால், அது 2007 வெறும் 6.12 சதவீதம்தான் வளர்ச்சியடைந்துள்ளது.
ஸ்டீல் துறை: ஸ்டீல் துறை நல்ல வளர்ச்சியைக் காணுமாம்.
ஜிண்டால் ஸ்டீல் & பவர் : 13ஆம் தேதி ரூ.2134க்கு வாங்கினேன். கிட்டதட்ட 11 சதவீதம் லாபம். 5:1 என்று பங்கு பிரிப்புக்கு முன் அது 15500 என்று போனதாக ஞாபகம். அது ரூ.2700 வரை வந்தா வித்துரலாம்னு இருக்கேன்.
3 comments:
எஸ்பிஐ மேக்னம் டேக்ஸ் கெயின் - பரஸ்பர நிதியம் பற்றி ஒரு கட்டுரை தந்து உதவுங்களேன்..
<==
தமிழ்நெஞ்சம் said...
எஸ்பிஐ மேக்னம் டேக்ஸ் கெயின் - பரஸ்பர நிதியம் பற்றி ஒரு கட்டுரை தந்து உதவுங்களேன்..
==>
அது வருமான வரிச்சலுகைக்குன்னு உள்ள மிகபொருத்தமான் பரஸ்பர நிதின்னு மட்டும் தெரியும். இப்படி கேட்டு ரொம்ப உணர்ச்சிவடப்பட வைக்காதீங்க ===))). யாரோ ஒருத்தர் பரஸ்பர நிதிக்குன்னு தனியா ஒரு ப்ளாக் வச்சிக்கிறமாதிரி ஞாபகம். அதுல தேடிப்பாருங்களேன்.
//
யாரோ ஒருத்தர் பரஸ்பர நிதிக்குன்னு தனியா ஒரு ப்ளாக் வச்சிக்கிறமாதிரி ஞாபகம். அதுல தேடிப்பாருங்களேன்.
//
நாணயம்
Post a Comment