Monday, November 19, 2007

19.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.

நான் வாங்கிய பங்குகள்:

இண்டியா சிமெண்ட்ஸ்:

நாணயம் விகடனில் வந்த பரிந்துரையை வைத்து ஜனவரி முதல் வாரத்தில் ரூ.232க்கு கொஞ்சம் பங்குகளை வாங்கினேன். பிறகு சில நாட்களில் 206க்கு வாங்கினேன். இன்னும் சில நாட்களில் 199க்கு வந்த போது மறுபடியும் கொஞ்சம் பங்குகளை வாங்கினேன். அதற்கப்புறம் அது 166க்கு வந்தபோது நொந்துபோனேன்.

இது அடிப்படையில் மிகவும் நல்ல பங்கு.கடந்த காலாண்டுகளில் நல்ல லாபம் ஈட்டியுள்ளது.செய்திகளின்படி சிமெண்ட் தேவைப்பாடு மிக நல்ல அளவில் இருக்கிறது.அப்படி இருந்தும் ஏன் பங்கின் விலை குறைந்தது?

ஒரு பங்கின் விலை அதன் அடிப்படையை(அதன்பங்கு லாபம்,எதிர்கல வாய்ப்பு) மட்டும் வைத்து முதலீட்டாளர் வாங்குவதில்லை. சிமெண்ட் தேவை பருவ கால மாற்றத்துக்குட்பட்டது. வெயில் காலத்தில் நன்றாகவும் மழைக்காலத்தில் குறைவாகவும் தேவைப்பாடு உள்ள பொருள். சிமெண்ட் விலை கடந்த ஒரு வருட காலத்தில் இரட்டிப்பாகியிருக்கிறது.அதன் விலையைக்கட்டுப்படுத்த வேண்டும் என்று எல்லாரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போதும் சொல்கிறார்கள்.உடனே சிமெண்ட் நிறுவனப் பங்குகளின் விலைகள் குறைந்தன.அதன் விலையை மட்டுப்படுத்தும்பொருட்டு அந்த சமயத்தில் சிமெண்டுக்குஅதிக வரி விதிக்கப்பட்டது. அப்போதும் சிமெண்ட் பங்குகளின் விலை குறைந்தன.ஒரு கட்டத்தில் பங்கின் விலை 160க்கு வந்தது. அப்போது ஏதோ ஒரு நிறுவனம் நிறைய எண்ணிக்கையில்(லட்சக்கணக்கில்) இந்த நிறுவனப் பங்குகளை வாங்கினார்கள். இதை ப்ளாக் டீல் என்கிறார்கள். இந்த விபரங்களையும் இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம். அந்த மாதிரி நிறுவனங்கள் நம்மைப்போல் சாதாரணமான் முதலீட்டாளர்கள்போல் கிடைத்த விலைக்கு எந்தப் பங்கையும் வாங்க மாட்டர்கள்.ஒரு பங்கு இவ்வளவு பெறும் என்று கணக்கிட்டு வாங்குவார்கள்.அதனால் பங்கின் விலை குறைந்தது.

அப்புறம் முதல் காலாண்டு முடிவு அறிவிக்கப்பட்டவுடன் பங்கின் விலை கூடியது. 2வது காலண்டு முடிவு அறிவிக்கப்படும்முன் பங்கு விலை 316வரை போனது.சில வாரங்களில் அது 260க்கு வந்தது. இப்போது(19அக்டோபர்2007) 311க்கு வந்து விட்டது.

அதனால் இப்பொதெல்லாம் விலை குறையும்போதெல்லாம் 10,30 என்று இந்த பங்கை வாங்குகிறேன்.

1 comment:

மங்களூர் சிவா said...

my favourite stok. but i m not holding now.