நான் வாங்கிய பங்குகள்:
பி ஹைச் இ எல்(BHEL):
03.04.2007 அன்று தீபக்கின் ப்ளாக்கில் வந்த ஆய்வுரையின்படி இந்தப் பங்கை வாங்கணும் என்று முடிவெடுத்தேன். பின் மாதக்கடைசியில் ரூ.2495க்கு வாங்கினேன். மே மாத இறுதியில்(என்று நியாபகம்) போனஸ் 10 பங்குக்கு 10 பங்கு கிடைத்தது. அதனால் விலையும் சரிபாதியாய்க் குறைந்தது. அதாவது, வாங்கிய பங்குகள் 20 என்றும், விலை 1250 என்றும் ஆகியது. ஜூன் மாதம் 10 பங்குகளை பங்கொன்றிற்க்கு 1407 என்ற விலையில் வித்தேன். மீதி 10 பங்குகளையும் 1705 என்ற விலையில் வித்தேன்.
லாபம் = 10*(1407 - 1250)+10*(1705 - 1250) = 1570+4550 = 6120
சுமார் 25 சதவீத வளர்ச்சி, அது மிகக் குறுகிய காலத்தில் - 3 மாதத்தில். அதாவது, ஒரு வருடத்தில் பணம் இரட்டிப்பாகிறது. இன்று அப்பங்கின் விலை 2650. விற்க்காமலே வைத்திருந்தால்,வருடத்திற்க்கு 400 சதவீததிற்க்குமேல்.
அடிப்படையில் நல்ல நிறுவனம் என்று தெரிகிறது. பங்கின் விலையும் நன்றாக அதிகரிக்கிறது. அப்புறம் எதற்க்கு விற்க்க வேண்டும்? எல்லாம் லாபம் பார்க்க வேண்டும் என்ற (அற்ப) ஆசைதான். அதற்க்காக அந்தப் பங்கை திரும்பவும் வாங்காமல் விட்டுவிடுவோமா? ஆகஸ்ட் 16ல் பங்கு சந்தை விழுந்தபோது 1615 என்ற விலையில் வாங்கினேன்.
கணிணி முலம் எளிதாக பங்கு வணிகம் செய்பவர்கள்,லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதிரி அவ்வப்போது விற்று லாபம் பார்க்கலாம். இல்லாவிடில் அப்படியே விட்டு வைப்பதுதான் உத்தமம். இப்படி அடிக்கடி விற்று வாங்குவதால் நமக்கு லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, அந்த பங்கு வணிக வலைதளத்தை நடத்தும் தரகு நிறுவனத்திற்க்கு தரகு மூலம் நல்ல லாபம்!
Tuesday, November 20, 2007
20.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.
ஆக்கம் சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) at Tuesday, November 20, 2007
Labels: பங்கு
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்ல முயற்சி...
உங்களின் அனுபவம் பல நண்பர்களுக்கு உதவியாய் இருக்கும், தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்.
நண்பரே...
உங்கள் பதிவினை தமிழ்மணம், தேன்கூட்டில் இனைக்கவில்லையென நினைக்கிறேன்...
இனைக்கலாமே....நிறைய பேரின் பார்வைக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
வாங்க பைசாபவர்
<==PAISAPOWER said...
உங்கள் பதிவினை தமிழ்மணம், தேன்கூட்டில் இனைக்கவில்லையென நினைக்கிறேன்...>
ஆம். இணைக்க வேண்டும். தமிழ்மணத்தில் இணைக்கத் தேவையான் லிங்கை அலுவலக கணிணியில் உபயோகப்படுத்த அது அனுமதிக்கவில்லை. கூடிய விரைவில் இணைத்துவிடுவேன்.
<=
ஆம். இணைக்க வேண்டும்.தமிழ்மணத்தில் இணைக்கத் தேவையான் லிங்கை அலுவலக கணிணியில் உபயோகப்படுத்த அது அனுமதிக்கவில்லை.கூடிய விரைவில் இணைத்துவிடுவேன்.
=>
டோண்டுவின் உதவியால் தமிழ்மணத்தில் இணைத்தாகிவிட்டது.
நன்றி பைசாபவர்
good work.
keep writing more.
regards
Sivaraman
Post a Comment