Thursday, November 22, 2007

22.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.

நான் வாங்கிய பங்கு : ஹெங்கல் இண்டியா

"ஹெங்கோ ஸ்ட்ரெயின் சேம்பியன்" என்ற டிடர்ஜண்ட் பௌடரை இந்த நிறுவனம்தான் வெளியிடுகிறது. இந்த பங்கிற்க்கு நாணயம் விகடனிலும் பின் எகனாமிக் டைம்ஸிலும் பரிந்துரை வந்தது. ஏப்ரலில் இந்த பங்கை ரூ.23.11க்கு(தரகு,வரிகள் உட்பட) வாங்கினேன். இன்று அதன் விலை 23.

நேற்று முன் தினம் எல்லாப் பங்குகளும் வகை தொகையில்லாமல் விலையேறியபோது இந்தப் பங்கும் 15 சத வீதம் விலை ஏறியது. இந்த மாதிரி பங்குகள் எப்போது விலை ஏறும் என்று தெரியாது. அதற்க்கு வருடக்கணக்கில்கூட ஆகலாம். அவ்வளவுநாள் காத்திருக்க பொறுமையில்லாதவர்கள் இந்த மாதிரி நல்ல விலை கிடைக்கும்போது விற்றுவிட்டு வெளியேறுவதுதான் நல்லது.
இன்னும் என்னிடம் யுனிடெக்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,ரிலையன்ஸ் பெட்ரோலியம் போன்ற நிறைய பங்குகள் இருக்கின்றன.


பங்கை எந்த விலையில் வாங்குவது?
நல்ல பங்கை கண்டுபிடிப்பதுகூட அவ்வளவு சிரமமில்லை. ஆனால், அதன் வாங்கும் விலையை கண்டுபிடிப்பதுதான் மிகவும் சிரமம். நாம் வாங்கியவுடன் விலை குறையும்,விற்றவுடன் விலை கூடும். நம்ம ராசி அப்படி! வாங்கும் விலை தெரிந்தால்தான், அந்தப் பங்கின் விலை குறையும்போது வாங்கி "சராசரி"(ஆவரேஜ்) செய்வதற்க்கு உதவியாக இருக்கும். ஒரு நிறுவனத்தின் மொத்த பெறுமான மதிப்பை(Enterprise Value) வைத்து, இன்ன விலைக்கு இந்தப் பங்கை வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறுவார்கள். வோடாபோன் நிறுவனம் ஹட்சை வாங்கும்போது அதன் நிறுவன மதிப்பு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்வார்கள். அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஒரு பங்கு நிபுணர் சிஎன்பிசியில் இண்டியா சிமெண்ட் ரூ.306 வரை போகும் என்றார். எப்படி இவ்வளவு துல்லியாய் சொல்கிறார். இவரல்லவோ சிறந்த பங்கு நிபுணர் வியந்து போனேன்! இந்தியா சிமெண்ட்ஸின் ஆண்டறிக்கையை படிக்கும்போதுதான் தெரிந்தது, அந்த விலைக்குதான் பின்னாளில் மாற்றத்தகுந்தவாறு கடன் பத்திரங்களை வெளி நாட்டு நிறுவன முதலீட்டாளர் இண்டியா சிமெண்ட்ஸிடமிருந்து வாங்கியிருக்கிறார் என்று.

சரி பங்கு என்ன விலைக்கு வாங்கலாம் என்று தெரிந்துவிட்டது. உடனே வாங்கிடலாமா? கூடாது.தொடர்ந்து நாம் வாங்கப்போகும் பங்கை கவனித்து வந்தால்தான் அந்தப் பங்கு என்ன அதிக விலைக்கு மேலே போகும்,என்ன குறைந்த விலைக்கு கீழெ வரும்(விழும்) என்று தெரியும். இண்டியா சிமெண்ட்ஸ் 310,320 வரைக்கு மேலே போகும். 260 வரை கீழே வரும். இந்த விலையில் வாங்கலாம் என்று தெரிகிறது.


எத்தனை பங்குகள் வாங்கலாம்?
நீங்கள் மொத்தம் வாங்க நினைத்திருக்கும் எண்ணிக்கையிலான பங்குகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாங்கலாம். அதாவது,உதாரணத்துக்கு, 1000 பங்குகள் வாங்கு வேண்டும் என்று நினைத்திருந்தால் அவ்வப்போது சந்தை சரியும்போது 50,100 என்று வாங்கலாம். அல்லது ரூ.5000,ரூ.10000க்கு எந்த எண்ணிக்கையில் பங்கு வாங்க முடியுமோ அந்த எண்ணிக்கையில் வாங்கலாம்.


பங்கை எப்போது விற்க்கலாம்?
நீண்ட கால முதலீட்டாளர்க்கு வாங்கிய பங்கை விற்க்க வேண்டிய அவசியமே இல்லை. அவசியம் நேரும்போது விற்க்க வேண்டும் எனில் அந்தப் பங்கின் விலை அதிகமாய் இருக்கும்போது விற்கலாம். அல்லது, எப்போதும் 2,3 சதவீதம் கூடும் பங்கின் விலை திடீரென 8,10 சதவீதம் கூடினால் அப்போது விற்று, திரும்ப அந்தப் பங்கு குறைந்த விலைக்கு கிடைக்கும்போது வாங்கலாம்.ஆனால்,இந்த மாதிரி விற்ற விலையைவிட குறைந்த விலைக்கு வரும்போது வாங்குவது அவ்வளவு எளிதானது அல்ல.

5 comments:

தென்றல் said...

பயனுள்ள தகவல், சிவா!


//நல்ல பங்கை கண்டுபிடிப்பதுகூட அவ்வளவு சிரமமில்லை. ஆனால், அதன் வாங்கும் விலையை கண்டுபிடிப்பதுதான் மிகவும் சிரமம். நாம் வாங்கியவுடன் விலை குறையும்,விற்றவுடன் விலை கூடும். நம்ம ராசி அப்படி!//

ஹா..ஹா...!
ஒண்ணு கவனிச்சிங்கனா, சிவா...ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த 'ராசி' எல்லாருக்குமே நல்லாவே வேலை செய்யும்!! ;)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க தென்றல்.
ஆமா. இங்கு "நம்ம" என்பது எல்லோருக்கும் பொருந்தும் -)

Prasanna Sugumaran said...

நான் ஒரு ட்ரேடர்... பங்கு வாங்க பல நாள் காத்திருந்து மார்கெட் க்ராஷ் ஆனதும் வாங்கலாம் என்று பார்த்தால் 4 நாளில் 1000 பாய்ன்ட் குறைந்து ஒரெ நாளில் 2000 பொய்ன்ட் எருது ... ஏன்ன கொடும இது?
then when can we buy it?!! hehe

மங்களூர் சிவா said...

கலக்கல்!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க பிரசன்னா,
பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தவிர மற்றவர்களெல்லாரும் "சூதாடிகள்" என்று சொல்வார்கள். பங்கு முதலீட்டில் குறுகிய காலம் என்ற வரையரையே கிடையாது. டிரேடர்கள் பங்கு வர்த்தகம் செய்யும்போது கட்டாயமாக ஸ்டாப் லாஸுடன் செய்ய வேண்டுமாம்.
பங்கில் தின வணிகம் செய்பவர்கள் "தமிழில் பங்கு வணிகம்(http://panguvaniham.wordpress.com/)" போன்ற வலைத்தளத்துக்கு சென்று அதில் பரிந்துரைக்கப்பட்ட பங்குகளை முயற்ச்சி செய்து பார்க்கலாம்.
இன்று அதில் கொடுக்கப்பட்ட பரிந்துரை
Buy Reliance Energy at 1603, target: 1640. Stoploss: 1595
இன்று இந்தப்பங்கு 1743வரை போனது.

வாங்க மங்களூர் சிவா.