Wednesday, November 28, 2007

28.11.2007 குறுகிய கால முதலீடு,பங்கு வணிகம்,சூதாட்டம்

என்னதான் நீண்ட கால முதலீடு என்று பங்கு வாங்கினாலும், குறுகிய காலத்தில் லாபம் பார்க்காமல் மனது பொறுப்பதில்லை.

பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஒரே நாளில் 500,700 என்று கீழிறங்குகிறது / மேலேறுகிறது. நிறைய பங்குகள் காரணமே இல்லாமல் திடீரென கன்னாபின்னாவென மேலேறுவதும் கீழிறங்குவதும், பங்கு வணிகம்(டிரேடிங்) கன ஜோராக நடந்துகொண்டிருப்பதை உறுதி செய்கிறது.

ஒவ்வொரு முதலீட்டாளருக்குள்ளும் ஒரு டிரேடர்/சூதாடி இருப்பர். அவர் சீக்கிரம் பணம் பண்ண வேண்டும் என்று நம்மை நச்சரித்துக்கொண்டு இருப்பார். அதையும் முயற்சி செய்து பார்க்கலாமே. லாபமோ நட்டமோ அவரவர் திறமை / அதிர்ஷ்டத்தைப்பொறுத்தது.

என்ன பங்கில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று பார்த்தால் இப்படி சூதாட இவன் வழி சொல்ரான்னு நினைக்க வேன்டாம். "களவும் கற்று மற" என்ற ஆன்றோர் வாக்கிற்க்கு ஏற்ப நாமும் நடக்கணுமில்லயா? என்னவோ ஆன்றோர் சொல்லி எல்லாம் கேட்ட மாதிரி!

இதற்க்கான காரணத்தை அடுத்து வரும் பதிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

எஸ்ஸார் ஆயில் என்று கேள்வியே படாத பங்கு ஒரே நாளில் சுமார் 12 கோடி பங்குகள் ரூ.2350 கோடி அளவுக்கு வியாபாரமாயுள்ளன என்பதிலிருந்தே டிரேடிங் பெரிய அளவில் போய்கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.அதில் டெலிவெரி சதவீதம் வெரும் 7 தான்.மீதி சதவீதம் வெறும் வணிகம்தான்.

இனிமேல் சூதாட்டத்தை கௌரவமாக தின வணிகம்(ஒரே நாளில் செய்யாமல் சில நாட்களில் வணிகம் செய்தாலும்) என்றே சொல்லிக்கொள்ளலாம்!

வீட்டில் இண்டெர்னெட் தொடர்போ அல்லது ப்ரௌசிங் மையத்தில் டிரேடிங் செய்யும் வசதியோ அல்லது அலுவலகத்தில் வேலை அதிகம் இல்லாமல் ஈ ஓட்டிக்கொண்டிருந்தால் தான் தின வணிகத்தில் ஈடுபட முடியும். நான் அவ்வபோது செல்லும் ப்ரௌவுசிங் மையத்திற்க்கு ஒருவர் சரியாக காலை 10 மணியளவில் தண்ணீர் பாட்டிலுடன் வந்துவிடுவார். அவர் சந்தை முடியும் நேரம் பிற்பகல் 3:30 மணி வரை இருப்பார். விசாரித்த போது அவருக்கு அதுதான் முழு நேரத்தொழிலாம்.

தின வணிகத்தில் கவனிக்க வேண்டியது

1.நாம் தின வணிக்த்தில் ஈடுபடும் தினத்தன்று எவ்வளவு பணம் இழக்கத்தயாராய் இருக்கிறமோ, அதுவரைக்கும் டிரேடிங்கில் ஈடுபடுவது. உதாரணமாக ரூ.1000 என்று வைத்துக்கொள்ளலாம். நஷ்டம் வந்தால் ரூ.1000உடன் நிறுத்திகொள்ளனும். விட்டதைப் பிடிக்கிறேன் என்று மற்ற நல்ல பங்குகளை விற்று தின வணிகத்தில் ஈடுபடக்கூடாது.

2. தொலைக்காட்சி,இணையதளத்தில் டெக்னிகல் அனலிஸ்ட்கள் சொல்வதை கேட்கலாம் அல்லது www.poweryourtrade.com போன்ற கட்டண வலைத்தளத்தில் உறுப்பினராகச் சேர்ந்துகொள்ளலாம். அவர்கள் அன்றன்றைக்கான தின வணிகப் பரிந்துரையை மிண்ணஞ்சல், குறுந்தகவல்மூலம்உங்களூக்கு அனுப்பிவிடுவார்கள்.

3.குறிப்பிட்ட நிறுவனகளைப் பற்றிய நல்ல/கெட்ட செய்தி வந்தால் அந்த பங்கின் விலை சடாரென ராக்கெட் வேகத்தில் பறக்கும்/விழும். பிரபலமான வாகன உற்பத்தி நிறுவனமான் வால்வோ, அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பங்குகளை வாங்கப் போகிறது என்ற செய்தியினால் அசோக் லேலண்ட் பங்கு நேற்று 10 சத வீதம் கூடியது. இதேபோல் செய்திகளால் அடிபடும் பங்கில்தான் தின வணிகம் செய்வது நல்லது.

4.முதல் அரை மணி நேரத்திற்க்கு, சந்தையின் போக்கை கவனித்துக்கொள்ள வேண்டும் ஏறுமுகமா, இல்லை இறஙுகுகமா என்று. சில சமயஙளில் முதல் அரை மணி நேரத்திற்குப்பின் பங்கின் போக்கு எதிர்மறையாய்ப் போய்விடும்.

5.தின வணிகத்தில் முதலீட்டில் செய்வதுபோல் அல்லாது,பங்கு ஏறும்போது வாங்க வேண்டும்,இறங்கும்போது விற்க்க வேண்டும்.

6. அதிக எண்ணிக்கையில்(லட்சத்தில்,மில்லியெனில்) பரிவர்த்தனை ஆகும் பங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் (நஷ்டத்தில்) விற்கும்போது பங்கை வாங்க ஆளிருக்கும்!

7. நஷ்டம் தவிர்த்தலை(ஸ்டாப்-லாஸை) கட்டாயமாக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது ரூ.100 விலயுள்ள பங்கை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அது மேலே போகாமல் 95க்கு இறங்குவதாக வைத்துகொள்வோம். இனிமேல் அந்தப் பங்கு மேலேறாது என்று உறுதியா தெரிந்தால் உடனே விற்றுவிடவேண்டும். அதேபோல் அந்த பங்கு மேலேறினால் குறிப்பிட்ட அளவுக்குமேல் ஏறாது. 125க்கு மேல் ஏறாது என்று வைத்துக்கொள்வோம்.120 வந்தவுடன் அது மேலேறுமா என்று கவனித்து அது கீழே இறங்க ஆரம்பித்தவுடன் 108,109 என்று எதவது ஒரு விலையில் விற்றுவிட்டு லாபம் பார்த்துவிடலாம்.

8.தின வணிகம் செய்யும்போது தொடர்ந்து நட்டம் வந்தால், "ச்சீ, இந்தப் பழம் புளிக்கும்" என்று தின வணிகத்துக்க் முழுக்கு போட வேடியதுதான்!







3 comments:

Anonymous said...

miga nalla pathivu........

மங்களூர் சிவா said...

அண்ணே கலக்குறீங்க!!

சொன்னதெல்லாம் கடைபிடிக்க முடியுதா ரியல் டைம் ட்ரேடிங்ல?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

மங்களூர் சிவா,
வாங்க,
ஆமாம்,நான் சொன்னதெல்லம் மிகச் சரியாக கடைபிடிக்க முடியுது.