Monday, February 4, 2008

04.02.2008 இன்றைய பங்குத்தகவல்

இந்தியா சிமெண்ட்ஸ் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி)

சென்ற வருடமும் ஜனவரியில் இதே மாதிரி பரிந்துரை செய்திருந்தார்கள். அப்போது ரூ.230க்கு இப்பங்கை வாங்கினேன். பின் இப்பங்கு ரூ.160வரை கீழே போனதாக ஞாபகம்.
எனெக்கென்னமோ,இந்தியா சிமெண்ட்டிலிருந்து பத்திரிக்கையாளர்களை அழைத்து வேண்டுமென்றே இவ்வாறு சொல்லியிருப்பார்களென்றே நினைக்கிரேன்.

மேலும், இண்டியா சிமெண்ட்ஸ் இண்டியன் பிரிமியர் லீகில் விளையாடும் சென்னை அணியை ஸ்பான்சர் செய்வதற்க்கு ரூ.354 கோடியை கொடுக்கிறார்களாம். இதெல்லாம் இந்தியா சிமென்ட்ஸுக்கு தேவையானதுதானா என்பது தெரியவில்லை.

இந்தியா சிமெண்ட்ஸின் அடிப்படையில் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை. அவர்களின் உற்ப்பத்தி விரிவாக்கத்தின் பலன் ஏப்ரலில் தெரியும் வரும்போல. அதாவது,கூடுதலாக உற்ப்பத்தி செய்யும் சிமெண்ட் ஏப்ரலில் விற்ப்பனைக்கு வரும்போல.ஆனால், விலை உயர்வு முன்பு போல - மூடைக்கு ரூ.160லிருந்து 250க்கு ஒரு வருடத்தில் வருவதெல்லாம் அவ்வளவு எளிதாக நடக்காது என்றே நினைக்கிரேன்.

5 comments:

மங்களூர் சிவா said...

பிடிச்சா வாங்குங்க இல்லைனா விட்ருங்க!!

பேப்பரில் / பத்திரிக்கையில் பரிந்துரை வருவது price momentum அடிப்படையிலும் நீண்ட கால முதலீடு அடிப்படையிலும்தான்.

தின வர்த்தக பரிந்துரைக்கு இது எவ்வளவோ மேல்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
மங்களூர் சிவா said...
பிடிச்சா வாங்குங்க இல்லைனா விட்ருங்க!!
==>
மங்களூர் சிவா
வாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க,இல்லாட்டி விட்ருங்க.
[எப்படி, நம்ம எதுகை மோனை, நல்லாருக்கா?]
<==
பேப்பரில் / பத்திரிக்கையில் பரிந்துரை வருவது price momentum அடிப்படையிலும் நீண்ட கால முதலீடு அடிப்படையிலும்தான்.
==>
மங்களூர் சிவா
வாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க,இல்லாட்டி விட்ருங்க.
[எப்படி, நம்ம எதுகை மோனை, நல்லாருக்கா?]

இண்டியா சிமெண்ட்ஸைப்பத்திய பதிவோட நோக்கம், ஏன் அப்படி நடக்குதுன்ற ஒரு அலசல்தான் - (Investigative Journlism மாதிரி) Investigative bloggism =))

மங்களூர் சிவா said...

//
[எப்படி, நம்ம எதுகை மோனை, நல்லாருக்கா?]
//
நல்ல வேளை இப்பிடி ஒரு லைன் போட்டீங்க நான் கொஞ்சம் பேஜார் ஆகிட்டேன்.

மங்களூர் சிவா said...

//
(Investigative Journlism மாதிரி) Investigative bloggism =))
//
கொஞ்சம் ஓவரா இல்ல!!!!????

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
மங்களூர் சிவா said...
//
(Investigative Journlism மாதிரி) Investigative bloggism =))
//
கொஞ்சம் ஓவரா இல்ல!!!!????
==>
ஹி ஹி அதுக்குத்தான் டபுள் ஸ்மைலி போட்டுட்டேனே.
சொல்லா முடியாது. யாருக்குத்தெரியும். அங்கே உள்ளே வேலை செய்றவனே, போட்டுகொடுத்துட்டான்னா, அப்ப இது Investigative Bloggism ஆயிரும் இல்லயா?
[அப்படி நடந்திருக்கு.என்னுடன் வேலை செஞ்சவரோட அப்பாக்கு அந்த கம்மெனில பங்கு இருந்தது. நண்பர் கம்பெனி விவகாரங்களையெல்லாம் அப்பாகிட்ட போட்டுக்கொடுத்துட்டார். கம்பெனியின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தின்போது, நண்பரோட அப்பா கேள்வி கேட்டுட்டார். கம்பெனிக்கு கேள்வி கேட்டவர் நண்பரோட அப்பான்னு தெரிஞ்சுபோச்சு. பின்னே,நண்பர் பங்குதாரரின், அந்த வருடாந்திரக் கூட்டதுக்கான ப்ராக்சி வருகை சம்பந்தமான கடிதத்தை இவரே கொண்டுபோய்க் கொடுத்தா கண்டுபிடிக்க மாட்டங்களா? அப்புரம் அக்கம்பெனியின் செயெலர்(Company Secretary) ஃபோன் பேசி கம்பெனியின் நிர்வாக அதிகாரிகிட்ட(Managing Director) சமாதானமா போகச்சொன்னார். நண்பரின் அப்பாவும் லேசுபட்ட ஆள் இல்ல. அவர் பெரிய கம்பெனியில தொழிற்சங்கத் தலைவரா இருந்தவர். அவரும் பதிலுக்கு என் மகன் வேலைக்கு எதுனா ஆச்சுனா, நான் கோர்ட்டுக்கு போவேன் சொல்லி மெரெட்டி இருக்கார்.]