நிஃப்டி குறீயிடு 200 நாட்கள் நகரும் சராசரி(Moving Average)யை விட குறைந்துபோய்ட்டதாம். அதாவது, நிஃப்டி குறியீடு 5000 தாண்டினால் பங்குச் சந்தை மேலேறுமாம். அது 5000 க்கு கீழே தொடர்ந்து 1 மாதத்துக்கு இருந்தால் அது கட்டாயமா கரடிச் சந்தைதானாம்.
சந்தையில் இப்போ குறியீட்டுப் புள்ளிகள் 200,400னு அதிகரித்தால்கூட பங்கு வணிகத்தின் மதிப்பு(volume) மிகக் குறைவுதானாம். அதுனால, புள்ளிகள் அதிகரிப்பு ஒரு செயற்கையான் அதிகரிப்புதானாம். அதாவது, சந்தை மேலேறுவதற்க்கு இன்னும் கொஞ்ச காலமாகுமாம்.
அலுவலகத்தில் என் பக்கத்து இருக்கையிலிருப்பவர் நாள் முழுவதும் சந்தை/பங்குகளின் போக்கை அவதானிப்பதோடு, மற்ற பங்குச் சந்தை நண்பர்களோடு சாட்(chat), மின்னஞ்சல் மூலமா தொடர்பு கொண்டபடி இருப்பார்.
அவருடைய நணபர், ஏதோ பங்கு வணிகரோட அலுவலகத்தில் இருக்காராம். அவர் உறுதியா சொல்ராராம், சென்செக்ஸ் 12000க்கு கட்டாயமா போகுமாம்.
மேற்கூறிய எல்லா விவரங்களையும் சீர்தூக்கிப் பார்த்தா, நட்டம் வந்தாலும் பரவாயில்ல, இப்போ பங்குச் சந்தையை விட்டு வெளியேறிவிடுவதுதான் உத்தமம் என்று எண்ணி ஒரு பங்கைத்தவிர, எல்லா பங்குகளையும் நேற்றே விற்று விட்டேன். ஒரு பங்கை நேற்று விற்க்க முடியவில்லை. ஏனெனில், அது Lower Circitல் இருந்தது. நல்ல வேளையாக இன்னைக்கு விற்றுவிட்டேன். அதன் பின்தான் மனசுக்கும் நிம்மதியாச்சு.
4 comments:
சூப்பர்.
உங்களை மாதிரியே எல்லாரும் வித்தாங்கண்ணா நாளைக்கே அந்த 12000 வந்திரும்.
நான் இன்னும் நம்பிக்கையோடு உக்காந்திருக்கேன்.
பாப்போம்.
வாங்க மங்களூர் சிவா,
என்ன பண்றது? அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதுன்னா பண்ணித்தானே ஆகணும்.
<==
மங்களூர் சிவா said...
நான் இன்னும் நம்பிக்கையோடு உக்காந்திருக்கேன்.
==>
ஆமாமா, நம்பிக்கைதான் வாழ்க்கை. வாழ்த்துக்கள்.
சிவா,
நானும் மங்களூர் சிவாவைப்போல நம்பிக்கையுடன் இருக்கிறேன், என் போர்ட்போலியோவில் உள்ள பங்கு அனைத்தும் 20% - 30% இறங்கியுள்ளது, விற்றாலும் நஷ்டம், முடிவு எடுக்க மிகவும் தயக்கமாக உள்ளது, பார்ப்போம் நம்பிக்கையுடன்,.... நன்றி....
வாங்க கணேஷ்.
ஆமா. நம்பிக்கை முக்கியம்.என்னோட விஷயம் வேற. இன்னும் என்னுடைய பரஸ்பர நிதி சிலத அப்படியேதான் வச்சிருக்கேன்.
உங்களோட ஃப்ரொபைல்ல உங்களோட ஜி-மெயில்/ஈ-மெயில் ஓண்ணும் இல்ல.
என்னோடது siprid@gmail.com . உங்களோட ஈமெயில அனுப்பவும்.
Post a Comment