Thursday, February 21, 2008

21.02.2008 இன்றைய பங்குத் தகவல்

இன்னும் ரெண்டு,மூணு நாளைக்கு நிஃப்டி 4950/5000(சப்போர்ட் லெவெல்) போகும்வரைக்கும் பங்குச்சந்தை இப்படியேத்தான் போகுமாம். அடுத்த வியாழனுக்கு முன்பு, F&Oக்கு இந்த மாத முடிவு தேதிக்கு முன்பு, ஷார்ட் கவரிங் இருக்குமாம்.

ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் தின வர்த்தகம், ஸ்விங் ட்ரேட் செய்து பார்க்கலாம்.

உங்களுக்குத்தெரிந்த பங்கு, நீங்கள் எதிர்பார்த்த, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்போது, வாங்கி 3,5 நாட்கள் பொறுத்திருந்து சுமார் 5%,10% லாபம் என்று கிடைக்கும்போது விற்று விட்டு வெளியேறி விடலாம்.

6 comments:

மங்களூர் சிவா said...

//
உங்களுக்குத்தெரிந்த பங்கு, நீங்கள் எதிர்பார்த்த, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்போது, வாங்கி 3,5 நாட்கள் பொறுத்திருந்து சுமார் 5%,10% லாபம் என்று கிடைக்கும்போது விற்று விட்டு வெளியேறி விடலாம்.
//
மாசகணக்கா வெச்சிருக்கேன் என் 'காதலி'யை. பாக்கலாம் மேல 'ஏற'றாளான்னு!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
மங்களூர் சிவா said...
மாசகணக்கா வெச்சிருக்கேன் என் 'காதலி'யை. பாக்கலாம் மேல 'ஏற'றாளான்னு!
==>
'காதலி'யை எல்லாம் அப்பப்ப மாத்திக்கிட்டே இருக்கணும்னு. மனைவியைத்தான் மாத்த முடியாது =) வீக்கெண்ட் ஜொள்ளு எல்லாம் பதிவு போடுற உங்களுக்குத் தெரியாதா? பிக்கப்-டிராப்தான் சிறந்ததுன்னு =) நான் பங்கத்தான் சொன்னேன் =))

GANESH PL said...

சிவா,

நானும் மங்களுர் சிவாவின் கருத்தை ஆமோதிக்கிறேன், தங்களைப்போல் எங்களால் PICKUP & DROP செய்யமுடியவில்லை, இனிமேல் தான் தங்களின் POLICYயை முயன்று பார்க்க வேண்டும். எனது MAIL முகவரி gangaiganesh@gmail.com, தாமதத்திற்க்கு மன்னிக்கவும், தாங்கள் எதில் TRADE (BROKER)செய்கிறீர்கள், நானும் RELIANCE MONEYல் டிரேட் செய்கிறேன், அதில் FUTURE & OPTIONS எப்படி செய்வது என்று தெரியவில்லை, மங்களூர் சிவாவும் RELIANCE MONEYல் தான் டிரேட் செய்கிறார், அவரிடம் கேட்கலாம் என்று உள்ளேன், தங்களுக்கு தெரிந்தால் சொல்லவும். RELIANCE MONEY CUSTOMER SERVICE VERY POOR,.... நன்றி....

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

கணேஷ்,
தங்கள் வருகைக்கு நன்றி.
ரிலையன்ஸ் மணி ரொம்ப ஸ்லோ.அதனால்,நான் ஷேர்கான் தான். பியூச்சரில் நான் இதுவரை ஈடுபட்டதில்லை,கேஷ்ல மட்டும்தான்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
ganesh said
RELIANCE MONEY CUSTOMER SERVICE VERY POOR,.... நன்றி.... ==>
உண்மைதான், கொடுக்கும் காசுக்குத்தகுந்த மாதிரிதான் அதன் வாடிக்கையாளர் சேவையும் இருக்கும்.
1. சிறந்த சேவை அதிகக் கட்டணம் - ஐசிஐசிஐ
2. மித சேவை மிதக் கட்டணம் - ஷேர்கான்
3. சேவையா? அப்படின்னா? மிகக்குறைக் கட்டணம் - ரிலையன்ஸ் மணி

GANESH PL said...

சிவா,

தாங்கள் SHAREKHAN ல் எந்த BROKERAGE PLAN ல் இருக்கிறீர்கள், எவ்வளவு BROKERAGE, சேரும் கட்டணம் எவ்வளவு, அவர்களின் SERVICE எப்படி? நானும் இதுவரையில் CASH TRADE மட்டுமே செய்து வந்துள்ளேன், சில நேரங்களில் FUTURE ல் முற்ச்சி செய்யலாம் என்று நினைத்தால் RELIANCE MONEY SOFTWARE ல் எப்படி செய்வது என்று ஒரு தகவலும் அவர்களின் உதவி கையேட்டில் விளக்கம் ஒன்றும் இல்லை, WEBSITE லும் உள்ள DEMO ல் ஒரு விளக்கமும் இல்லை,.. ICICIDIRECT ல் எல்லா விளக்கமும் நன்றாக உள்ளது ஆனால் BROKERAGE COMMISSION அதிகமாக உள்ளது, PROFIT ல் பாதி அவர்களின் கமிஷனே போய்விடும்,... தங்களின் தகவல்களுக்கு நன்றி..... மீண்டும் சந்திப்போம்.......